தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுளளது.
முன்னதாக, அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி வெளியானது. இதற்கான, விண்ணப்பங்கள் நவம்பர் 7ம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச கல்வி தகுதியாக 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
மேலும், பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நவம்பர் 14ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும், படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதியன்று (புதன்கிழமை) நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் மதிப்பிடப்படும் என்றும், இதற்கு அதிகபட்சமாக 40 (வாசித்தல் 10, எழுதுதல் - 30 ) மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் வருவாய் நிருவாக ஆணையர் எழுதியுள்ள கடிதத்தில், " தமிழகத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான படித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு வரும் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களால் டிசம்பர் மாதம் 4ம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசித்தல் மற்றும் எழுதுதல் தகுதி தேர்வு:
எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம். இதற்கு அதிகபட்சமாக, 10 மதிப்பெண் வழங்கப்படும். அதேபோன்று, ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். இதற்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்
அதன்பின், நேர்கானல் தேர்வு, மூல சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் அதிகபட்ச மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
No comments:
Post a Comment