விலையுயர்ந்த லெதர் சோபாக்களை வைத்திருப்பது வீட்டிற்கு கம்பீரமான லுக்கையும், அழகையும் தரும் என்றாலும், அதனை பராமரிப்பது பெரும் சவாலான காரியமாகும். குறிப்பாக க்காலங்களில் சோபா முழுவதும் பூஞ்சை பிடித்தது போல் பரவ ஆரம்பிக்கும். இதனால் சோபாவை பராமரிப்பது என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும். போதாக்குறைக்கு லெதர் சோபாவை சுத்தம் செய்யும் போது கடினமான கிளீனர்கள், ஹார்டான கருவிகளை பயன்படுத்தக்கூடாது என பல கட்டுப்பாடுகள் வேறு உள்ளன. எனவே தான் லெதர் சோபாக்களை சுத்தம் செய்வதற்கான எளிமையான 5 குறிப்புகளை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்...
1. கறைகளை துடைத்தல்: ஆடம்பரமான பிற வகை சோபாக்களைப் போல் அல்லாமல், லெதர் சோபாக்களில் எளிதில் கறை படிவது கிடையாது. இருப்பினும் காபி, டீ, தக்காளி சாஸ் போன்றவை சிந்தினாலோ அல்லது வேறு விதமான கறைகள் ஏற்பட்டாலோ அதனை உடனடியாக மென்மையான, உலர்ந்த துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான திரவங்கள் லெதர் சோபாக்களில் எளிதில் ஊடுருவி அதன் நிறத்தை பாதிக்கக்கூடும். லெதர் சோப்பா மீது எண்ணெய் பிசுக்கு அதிகமுள்ள உணவு சிந்தினால், அதனால் உருவாகும் கிரீஸ் போன்ற கறையை அகற்றுவது கடினமானதாக இருக்கும். அதன் மீது டால்கம் பவுடரைப் தூவி ஒரு இரவு முழுவதும் விட்டுவிட்டு, காலையில் மைக்ரோஃபைபர் கிளாத் கொண்டு சுத்தப்படுத்தலாம்.
2. வழக்கமான பராமரிப்பு: லெதர் சோபாக்களின் மடிப்புகளில் அதிகப்படியான தூசுகள் படிவது காலப்போக்கில் அதில் விரிசல் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும். எனவே வீட்டை தினமும் சுத்தப்படுத்துவது போலவே லெதர் சோபாக்களையும் தினந்தோறும் சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான துணியால் சோபாவை நன்றாக துடைத்து, பின்னர் அதனை உலர வைக்க வேண்டும். வேக்யூம் கிளினர் வைத்திருப்பவர்கள் தினமும் சோபாவின் மூலை முடுக்களில் படித்திருக்கும் அழுக்குகளை அகற்றலாம். லெதர் சோபா வைத்திருப்போர் 6 மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளது, அதன் கண்டிஷன் எப்படி உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
3. லெதர் சோபா கிளீனர்: லெதர் சோபாவில் அதிக சேதம் ஏற்படுவதை தவிர்க்க கடைகளில் கிடைக்கும் கமர்ஷியல் கிளீனர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக லெதர் சோபாக்களுக்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மென்மையான கிளீனர்களை பயன்படுத்தலாம். சுத்தமான பஞ்சைக் கொண்டு சோபாவை சுத்தப்படுத்திய பிறகு, பின்னர் காட்டன் டவல் கொண்டு துடைத்து அதனை உலர வைக்க வேண்டும்.
4. சேதங்களை சரி செய்தல்: லெதர் சோபாக்கள் மென்மையாக இருப்பதால் சிறிய கீறல்கள் கூட நாளாடைவில் பெரும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். லெதர் சோபாவில் ஏற்படும் கீறல்களை அகற்ற பிரத்யேகமாக கடைகளில் கிடைக்கும் லெதர் ஆயில் அல்லது கண்டிஷனை அப்ளே செய்து, வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். லெதர் சோபாக்களை பளபளப்பாகவும், கீறல்களை மறைக்கவும் மெழுகை பயன்படுத்தலாம்.
5. சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு: லெதர் சோபா மீது அதிகப்படியான சூரிய வெளிச்சம் படுவது நாளாடைவில் விரிசல், நிறமாற்றம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கக்கூடும். சூரிய ஒளி லெதர் சோபாவில் இயற்கையாக உள்ள எண்ணெய் வளத்தை உறிஞ்சி, அதற்கு சேதத்தை விளைவிக்கும். எனவே ஜன்னல் அருகே லெதர் சோபாவை வைப்பதை தவிர்க்கலாம் அல்லது ஜன்னலுக்கு திரைச்சீலைகளை அணிவிப்பதும் பாதுகாப்பளிப்பதாக அமையும்.
0 Comments:
Post a Comment