மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்பட மன அழுத்தம், தூக்கமின்மை, மாற்றங்கள், ஹார்மோன் மாற்றங்கள், உடல் காரணிகள், மருந்துகள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன.ஆனால் சில நேரங்களில் நீங்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் அல்லது பானங்கள் கூட உங்களது ஒற்றை தலைவலிக்கு காரணமாக இருக்க கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா.? குறிப்பாக சாலட்டி ப்ராசஸ்டு உணவுகள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியை தூண்டலாம். அதிக அளவு சோடியம் உட்செல்வது ரத்த அழுத்தத்தை அதிகரித்து தலைவலி அல்லது ஒற்றைத் தலைவலியை தூண்ட கூடும்.
நீங்கள் அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால் அதற்கான காரணத்தை முதலில் கண்டறிவது முக்கியம். இதற்கு நீங்கள் சாப்பிடும் உணவுகள் தான் காரணம் என்பதை கண்டறிய எளியவழி நீங்கள் என்ன உணவுகளை சாப்பிடுகிறீர்கள் மற்றும் என்ன பானம் குடிக்கிறீர்கள் என்பதில் எப்போதும் கவனமாக இருங்கள். உங்களுக்கு ஒற்றை தலைவலி தொடங்கும் முன்பே நீங்கள் இதில் கவனமாக இருப்பது, அது ஏற்பட்டவுடன் எந்த உணவால் எளிதாக கண்டறிய உதவுகிறது. கீழ்காணும் இந்த உணவு & பானங்கள் உங்களது ஒற்றை தலைவலியை தூண்ட கூடும்.
சீஸ் : நீங்கள் சீஸ் அதிகம் விரும்பி சாப்பிடுபவர் என்றால் உங்களது மைக்ரேனுக்கு இது காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இதில் ஒற்றைத்தலைவலியை தூண்ட கூடிய நேச்சுரல் கெமிக்கலான டைரமைன் (tyramine) அதிகம் உள்ளது. இந்த tyramine ரத்த நாளங்களை சுருக்கி விரிவடையச் செய்வதன் மூலம் தலைவலியை ஏற்படுத்த கூடும். இந்த கெமிக்கல் புரதம் நிறைந்த உணவுகள் வயதாகும் போது அதில் உருவாவதாக கூறப்படுகிறது. ப்ளூ , ப்ரி, செடார், ஃபெட்டா, மொஸரெல்லா, மியூன்ஸ்டர், பர்மேசன் மற்றும் சுவிஸ் சீஸ் உள்ளிட்டவை டைரமைன் அதிகம் உள்ள சில சீஸ் வெரைட்டிகள் ஆகும்.
அடிட்டிவ்ஸ் : இன்டஸ்டன்ட் நூடுல் பொருட்கள், சூப்கள், சுவையூட்டும் கலவைகள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் உள்ளிட்ட பல உணவுகளில் மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) சேர்க்கப்படுகிறது. இது ஒற்றை தலைவலியை தூண்டலாம் என தெரிகிறது. இதை எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஒற்றை தலைவலியை தூண்டுவதாக கூறப்படுகிறது. சோயா சாஸ் மற்றும் இறைச்சி டெண்டரைசர்களிலும் MSG முக்கிய மூலப்பொருளாக காணப்படுகிறது. all natural preservatives மற்றும் hydrolyzed protein என லிஸ்டட் செய்யப்பட்ட பேக்கேஜ்டு உணவுகளில் MSG காணப்படுகிறது.
காஃபின் : காஃபின் அடினோசின் எனப்படும் இயற்கையாக நிகழும் மற்றும் அவசியமான மூளைப் பொருளின் செயல்பாட்டை பாதிக்கிறது. ஒற்றை தலைவலியின் போது ரத்தத்தில் அடினோசின் அளவு அதிகரித்து நரம்புக்குள் செல்வது ஒற்றைத் தலைவலியை தூண்டுகிறது. காஃபின் இரு சாத்திய வழிகளில் மைக்ரேனை தூண்டுகிறது. காபி அல்லது மற்ற காஃபினேட்டட் பானங்கள் குடிப்பது ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும் அதே நேரம்,காஃபின் பழக்கத்தை கைவிடும் முயற்சிகளும் அடிக்கடி ஒற்றைத் தலைவலியை தூண்ட கூடும். காபி 6.3% - 14.5% வரை ஒற்றை தலைவலியைத் தூண்டுவதாக பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆல்கஹால் : ஆல்கஹால் எடுப்பது ரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்கிறது. இதனால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து ஒற்றை தலைவலியை ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி உள்ளவர்களில் சுமார் 35.6% பேருக்கு மதுபானங்கள் வலியை தூண்டுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் 77.8% பேர் மைக்ரேநாய் தூண்டுவதில் ரெட் ஒயின் பொதுவான மதுபானமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சாக்லேட் : ஒற்றைத் தலைவலியை தூண்டும் முக்கிய உணவு தூண்டுதலாக சாக்லேட் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரேனை தூண்டும் உணவாக சாக்லேட் இருக்க காரணம் அதில் இருக்கும் காஃபின் மற்றும் பீட்டா-ஃபைனிலெதிலமைனாக இருக்கலாம். இந்த இரண்டுமே ஒற்றைத் தலைவலியை தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. ஒற்றைத் தலைவலி உள்ள நோயாளிகளுக்கு நிபுணர்கள் வழங்கும் முக்கிய அறிவுரை சாக்லெட்டை தவிர்த்து விடுங்கள் என்பது தான்.
0 Comments:
Post a Comment