அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் (Centre for Climate change and Disaster management)தொடங்கியுள்ள புதிய திட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்படுகின்றனர். அந்த பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளது. பணியின் முழு விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள் :
பணியின் பெயர் | காலியாகவுள்ள இடங்கள் | சம்பளம் |
Project Scientist | 3 | ரூ.60,000/- |
Project Associate II | 2 | ரூ.50,000/- |
Project Assistant | 1 | ரூ.15,000/- |
தேவைப்படும் பிரிவுகள்:
பணியின் பெயர் | பிரிவு |
Project Scientist | Coastal Ecosystem, Urban Habitat, Geospatial Technology. |
Project Associate II | Urban Habitat, Geospatial Technology. |
பல்கலைக்கழக பணிக்கான கல்வித் தகுதி:
Project Scientist | சம்பந்தப்பட்ட துறையில் Ph.D or M.E/M.Tech/M.Sc |
Project Associate II | சம்பந்தப்பட்ட துறையில் M.E/ M.Tech/M.Sc |
Project Assistant | B.Com/BCA |
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொண்டு பூர்த்தி செய்து தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையாக நகல்களுடன் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் அறிவிப்பிற்கு : https://www.annauniv.edu/
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
The Director, Centre for Climate Change and Disaster Management, Anna University, Chennai - 600 025.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 05.11.2022
No comments:
Post a Comment