தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூட நுட்புநர் பணி.. முழு விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்..! - Agri Info

Adding Green to your Life

November 11, 2022

தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூட நுட்புநர் பணி.. முழு விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட விளம்பரத்தில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வுக்கூட நுட்புநர் பணியில் காலியாக உள்ள 32 இடங்களைத் தற்காலிக பணி அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

ஆய்வுக்கூட நுட்புநர் பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்ஆய்வுக்கூட நுட்புநர் நிலை-2 (Lab Technician Grade-II)
பணியிடங்கள்31
சம்பளம்ரூ.15,000/-
வயது18 வயது முதல் 59 வயது வரை.

ஆய்வுக்கூட நுட்புநர் கல்வித்தகுதி: 

மருத்துவ ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர் படிப்பு : DMLT (இரண்டு ஆண்டுகள்) King Institute of Preventive Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று பெற்று கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் சுயவிவர படிவத்துடன் தகுந்த சான்றிதழ்கள் வைத்து நேரிலும், தபால் மூகமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் படிவங்கள் நேரிலும் அளிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்பப்படும் முகவரி:

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி,

திருப்பூர் மாவட்டம் - 641 608.

Click here to join WhatsApp group for Daily employment news  

No comments:

Post a Comment