காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் அந்த நாள் எப்படி இருக்கும் என்று தீர்மானிக்கிறது. இதனால் தான் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்த உடனேயே காபி அல்லது தேநீரை குடித்து, ஃபிரெஷாக்கிக் கொள்கிறார்கள். அதேபோல காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து நிறைந்த உடனடி ஆற்றல் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட் உணவுகள் உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து, சீக்கிரமே பசி எடுப்பதால் அடுத்தடுத்து பானம், தின்பண்டம் என்று மதிய உணவுக்கு முன்பேவே அதிகமாக பசி எடுக்க துவங்கிவிடும்.
காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதிலாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நாள் முழுவதும் ஆற்றலுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்கும்.
ஊட்டச்சத்து நிபுணரான ராஷி சவுத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு இல்லாதவர்களுக்கு கூட ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று அதிகரிக்கும். எனவே, எல்லோருக்குமே சர்க்கரை அளவு சரியாக இருக்க வேண்டும் என்ற விதி பொருந்தும் என்றால் அனைவருமே காலையில் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறார்.
காலையில் பசிக்கிறது என்று ஒரு வாழைப்பழம் அல்லது பேரீச்சையை சாப்பிட்டால் அது உடனடியாக உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து உடனே பசியைத் தூண்டி விடும். எனவே காலை நேரத்தில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது என்பது எந்த மாயாஜாலமும் செய்து உங்களுக்கு ஆற்றல் தராது. உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும். எனவே உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கொழுப்பும் கூட உடலில் ஆற்றலாக மாறும் தன்மை கொண்டது. உடலில் கார்ப்ஸ் இல்லாத பொழுது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பு ஆற்றலாக மாறும்.
காலை நேரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகளை ஏன் சாப்பிட வேண்டும்?
No comments:
Post a Comment