இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு.. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..! - Agri Info

Adding Green to your Life

November 11, 2022

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு.. டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழாய் அமைக்கும் பிரிவில் தொழிற்பயிற்சி( Apprentices)பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க விவரங்களை இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:

பணியின் பெயர்Apprentices
பணியிடங்கள்465
வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதில் இருந்து அதிகபட்சம் 24 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Mechanicalமெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
Electricalஎலக்டிரிக்கல் இன்ஜீனியரிங் டிப்ளமோ அல்லது ஐடிஐ.
Telecommunication & Instrumentationஎலக்டிரிக்கல்,கமுனிகேசன்,ரேடியோ கமுனிகேசன் அல்லது போன்ற டிப்ளமோ அல்லது ஐடிஐ.
Assistant Human Resourceபட்டப்படிப்பு தேர்ச்சி
Accountantபட்டப்படிப்பு தேர்ச்சி
Data Entry Operator12 ஆம் வகுப்பு தேர்ச்சி
Domestic Data Entry Operator12 ஆம் வகுப்பு தேர்ச்சி

உதவித்தொகை விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Apprentices Act,1961/1973/ Apprentices Rules 1992 விதியின் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் தேர்வு முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://plapps.indianoil.in/PLApprentice/

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.11.2022.

தேர்வு நடைபெறும் என்று கருதப்படும் நாள் : 18.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news  


No comments:

Post a Comment