தமிழக ஈரோடு மாவட்ட கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் அரசு சாரா பெண்களுக்கான பிரத்தியேக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பணியின் பிரிவு | கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம். |
மாவட்டம் | ஈரோடு |
பணி நிலை | அலுவலகம் சாரா உறுப்பினர் |
வயது | 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும் |
பணியின் விளக்கம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள்(widow), கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளைக் களைத்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளைக் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து செயல் படுத்த வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
கைம்பெண் பிரதிநிதிகள் / பெண் கல்வியாளர்கள் / பெண் தொழில் முனைவோர்கள் / பெண் கல்வியாளர்கள் / பெண் தொழில் முனைவோர்கள் / பெண் விருதாளர்கள் / தன்னார்வ தொண்டும் நிறுவன பிரதிநிதிகள் எனத் தகுதியான பெண்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஈரோடு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இப்பணிக்கான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அலுவலக முகவரி:
ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகம்,
6வது தளம், மாவட்ட ஆட்சியரகம், ஈரோடு.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 17.11.2022.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment