இன்றைக்கு உள்ள பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றால் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் நிச்சயம் ஏதாவது ஒரு பணிக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆண்களை விட பெண்கள் சிறு வயது முதல் தனக்கானப் படிப்புகளை தேர்வதோடு எப்படியாவது வெற்றி பெற்ற வேண்டும் என லட்சியத்தோடு வாழ்வார்கள். சில பெண்கள் அதை நிறைவேற்றியும் காட்டுவார்கள். ஆனால் பெண்களின் இந்த கனவு தொடருமா? என்பது தான் பெரிய கேள்வியாக உள்ளது.பெண்கள் வீட்டில் இருந்தப்படியே சம்பாதிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக் கொள்வோம்.
டியூசன் (வீட்டிலேயே பாடம் கற்பித்தல்) : இன்றைக்கு உள்ள பெரும்பாலான பெற்றோர்களால் அருகில் அமர்ந்து குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியவில்லை என்பதோடு பலருக்கு நேரமும் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் வீட்டிலேயே டியூசன் சென்டர் ஆரம்பிக்கலாம். மாணவர்களுக்குத் தேவைப்படக்கூடிய விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் போது சிறந்த ஆசிரியராக நீங்கள் மாறுகிறீர்கள். இது உங்களுக்கு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். ஒருவேளை உங்களால் பாடம் எதுவும் கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை , கைவினைக் கலைகள், யோகா போன்ற உங்களின் திறமைகளை நீங்கள் வரும் தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்கலாம்.
கட்டுரை எழுதுதல் (content writing) : பெண்கள் பலருக்கு எழுத்துத் திறன் அதிகளவில் இருக்கும். தற்போது இதுபோன்றுள்ள பெண்களுக்காகவே சோசியல் மீடியாக்கள், டிஜிட்டல் மீடியாக்கள் போன்றவற்றில் பல வேலைவாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்களில், அலுவலகத்தில் கேட்கப்படும் தலைப்புகளுக்கு ஏற்ப கட்டுரை எழுதுதல், வாய்ஸ் ஓவர் கொடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இதன் மூலம் உங்களின் திறமைகள் வளர்வதோடு தனித்துவமான எழுத்துக்களால் நீங்கள் பிரபலமாவீர்கள் .
இதில் சிறப்பம்சம் என்னவென்றலால் நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் பணியாற்றலாம். ஃப்ரீலான்சிங் அதாவது பகுதி நேர ஊழியராகவும் பணியாற்றக்கூடிய வாய்ப்பை பெண்களுக்கு வழங்குகிறது.
குழந்தைப் பராமரிப்பு சேவைகள் (daycare service) : பொதுவாக குழந்தைகள் என்றாலே பெண்களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு வேளை நீங்களும் குழந்தைகளை அதிகளவு நேசிப்பவர்களாக இருந்தால் குழந்தை பராமரிப்பு மையங்கள் தொடங்குவது சரியான தேர்வாக இருக்கும். ஆம் இன்றைக்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் பணிக்கு செல்கிறார்கள். இந்நேரத்தில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கு வீட்டில் யாருமே இல்லை என்பதால் பாதுகாப்பான குழந்தைகள் பராமரிப்பு மையங்களை நாடுகின்றனர். அதிலும் பெண்கள் ஆரம்பத்தில், நல்ல வரவேற்பு கிடைக்கும். எனவே இந்தப்பணியை நீங்கள் தேர்வு செய்யலாம். இதுபோன்று உங்களால் வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைத் தேர்வு செய்து, உங்களின் குடும்ப தேவைகளுக்கு பெண்களாகிய நீங்கள் உதவி செய்ய முடியும்.
No comments:
Post a Comment