கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்! - Agri Info

Adding Green to your Life

November 22, 2022

கட்டணம் இல்லாமல் மைக்ரோசாப்ட் சான்றிதழ் படிப்புகளை படிக்க வேண்டும் - அரசின் அசத்தல் திட்டம்!

 

NCS digisaksham portal: இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறன்களை அதிகரிக்கும் வகையில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2015ம் ஆண்டு  மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை (National Career Service Portal)  தொடங்கியது. கிட்டத்தட்ட Naukri, Linkedin Job Search போன்ற இணைய சேவைகளுக்கு நிகரான வாய்ப்பை இந்த தளம் ஏற்படுத்தி தருகிறது.

வேலை தேடக்கூடியவர்களை, பொருத்தமான வேலையளிக்கும் நிறுவனங்களோடு இணைப்பதுடன், தொழில் வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இதில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 26ம் தேதி நிலவரப்படி, இந்த  இணையதளத்தில் 4,82,264 காலி இடங்கள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் இந்த சேவையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம்: கிராமப்புற இளைஞர்களின் டிஜிட்டல் திறன்களை  வழங்கி, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மைக்ரோசாப்ட்  நிறுவனத்துடன் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இணைந்து DIgisaksham எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ள அனைத்து இளைஞர்களும் இந்த திறன் படிப்பில் எந்தவித கட்டணமின்றி சேர்ந்து கொள்ளலாம். Excel, Python, Azure, Java,  Security Fundamentals ஆகிய பாடநெறிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

சுயமாக கற்கும் முறை, ஆன்லைனில் பயிற்ச்சியாளர்கள் மூலம் கற்கும், நேரடி பயிற்சி வகுப்புகள்  (  Digital Skills – Self paced learning, VILT mode training (Virtual Instructor led) and ILT mode training (Instructor led) என மூன்று வழிமுறைகளின் கீழ் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டு மையம் (Model Career Centres) மற்றும் எஸ்சி/எஸ்டி தொழில்நெறி வழிகாட்டு மையங்களை தொடர்பு கொண்ட பயிற்சி வகுப்புகளை தொடங்கலாம். இணைய வழியாக பயிற்சியை மேற்கொள்ள  https://www.ncs.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு - மாதிரி தொழிற்நெறி வழிகாட்டு மையம்

எஸ்சி / எஸ்டி வகுப்பினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் (National Career Service Centre For SC/ST) சென்னை சாந்தோமில் இயங்கி வருகிறது.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் NCS போர்டல் மூலமாகவோ, நேரடியாகவோ மைக்ரோசாப்ட் வழங்கும் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுங்கள். இதன் மூலம் , உங்கள் கணினித் திறன்கள் அதிகரிப்பதுடன் சந்தையில் மிகச் சரியான வேலையை தேர்ந்தெடுக்க உதவும்.


 Click here to join WhatsApp group for Daily employment news  

No comments:

Post a Comment