ண்ணா பல்கலைக்கழகத்தில் இ-கவர்ன்ஸ் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
பதவியில் பெயர் | பணிக்காலம் | சம்பளம் |
System Architect | 6 மாதம் | ரூ.45,000/- |
System Analyst | 6 மாதம் | ரூ.35,000/- |
System Administrator | 6 மாதம் | ரூ.35,000/- |
Programmer Analyst | 6 மாதம் | ரூ.25,000/- |
Software Developer | 6 மாதம் | ரூ.20,000/- |
Peon cum Driver | 6 மாதம் | தினசரி சம்பளம் |
கல்வித்தகுதி:
B.E/B.Tech/ MCA or M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் தேவை.
Peon cum Driver பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் LMV ஓட்டுநர் உரிமம் தேவை.
இதர தகுதிகள்:
Oracle, MySQL, Java, Codeigniter and Web Application Development, Server Maintenance, Linux Operating System, Network Management and Data Base
Administration, Web Application Development using Java/Codeigniter with Oracle/MySQL.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
குறிப்பு:
ஒரே விண்ணப்பதார் வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பிக்கையில் ஒவ்வொரு பதவிக்குத் தனி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.12.2022 மாலை 5.00 மணி வரை.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment