மத்திய அரசின் கீழ் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) அறிவிப்பில் பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Maintenance Supervisor, Operation Assistant, Duty Electrician/operator Semi - Skilled, Station Co-ordinator, RCS Co-didinator பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எப்படி விண்ணப்பிப்பது, தகுதிகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
பணியின் விவரங்கள்:
ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலையங்களில் காலியாகவுள்ள இடங்கள்.
பணியின் பெயர் | காலி இடங்கள் |
Maintenance Supervisor (Skilled) | 5 |
Operation Assistant (Skilled) | 5 |
Duty Electrician/operator Semi - Skilled | 5 |
Station Co-ordinator (Skilled) | 5 |
RCS Co-ordinator (Skilled) | 1 |
கல்வித்தகுதி:
Maintenance Supervisor (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் அனுபவம் தேவை.
Operation Assistant (Skilled) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 3 வருடம் Helliport /Airport, liasoning & co-ordination, and handling of passengers etc பிரிவுகளில் அனுபவம் தேவை.
Duty Electrician/operator Semi - Skilled பணிக்கு 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எலெக்டிரிசன் படிப்பில் 2 வருடம் ஐடிஐ அல்லது டிப்லோமோ படித்திருக்க வேண்டும். 3 வருடம் அனுபவம் வேண்டும்.
Station Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.
RCS Co-ordinator பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட அனுபவம் வேண்டும்.
வயது வரம்பு :
Maintenance Supervisor,Operation Assistant,Duty Electrician/operator Semi - Skilled பணிகளுக்கு விண்ணப்பிற்பதர்க்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Station Co-ordinator,RCS Co-ordinator பணிகளுக்கு விண்ணப்பிக்க 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
விண்ணப்பதார்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கப்படுவர்.
சம்பளம்:
ரூ. 17,446/- முதல் ரூ. 22,516/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
விண்ணப்பிக்க வேண்டிய தளம்:https://www.becil.com/careers
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.11.2022.
மேலும் விவரங்களுக்கு : https://www.becil.com/
No comments:
Post a Comment