உங்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருதா..? கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கலாம்... செக் பண்ணுங்க..! - Agri Info

Adding Green to your Life

November 29, 2022

உங்களுக்கு அடிக்கடி இடுப்பு வலி வருதா..? கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கலாம்... செக் பண்ணுங்க..!

 நம் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற பொருள் தான் கொலஸ்ட்ரால். ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவும் கொலஸ்ட்ரால் என்பது குறிப்பிட்ட அளவே இருக்க வேண்டும். இது ரத்தத்தில் அதிகமாக இருப்பின் அது ஹை கொலஸ்ட்ரால் என குறிப்பிடப்படுகிறது.

இதய நோய் முதல் பக்கவாதம் வரை பல சிக்கல்களுக்கு அடித்தளமாக அமைகிறது ஹை கொலஸ்ட்ரால். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதனால் ஏற்படும் தீவிர நோய்கள் முன்னறிவிப்பின்றி வரும் என்பதால் சைலன்ட் கில்லர் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஹை கொலஸ்ட்ரால் தொடர்புடைய சில முக்கிய அறிகுறிகள் உள்ளன. அவற்றை துவக்கத்திலேயே கண்டறிந்தது உஷாராகி விட்டால், தீவிர நோய் அபாயங்களை தவிர்க்க உதவும். உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் துவக்கத்தில் அவ்வளவு தெரியாது என்றாலும், போதுமான விழிப்புணர்வு இருந்தால் அறிகுறிகளை சரியாக அடையாளம் காண வாய்ப்பு அதிகம்.

இடுப்பு அல்லது குளுட்டியல் தசைகளை பாதிக்கும் ஹை கொலஸ்ட்ரால்:

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த நாளங்களுக்குள் அவை படிந்து plaques-களை உருவாக்குகிறது. இவை ரத்த நலன்களில் செல்லும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகின்றன. சீரான ரத்த ஓட்டம் இல்லாததன் காரணமாக உடலின் பல தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. இதன் விளைவாக உடலின் இடுப்பு மற்றும் பின்புறத்தில் குளுட்டியல் தசைகளில் வலி ஏற்படுகிறது.

வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் போது வலி அதிகரிக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி ஹை கொலஸ்ட்ரால் பிரச்சனையால் முதலில் பாதிக்கப்படக்கூடிய தசைகளில் முக்கியமானவை இடுப்பு தசைகள். இந்த சிக்கல் உள்ளவர்களில் பலர் தாங்கள் துவக்கத்தில் இடுப்பு பகுதியில் பயங்கரமான வலியை உணர்ந்ததாக கூறுவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் பெரும்பாலானோர் கொலஸ்ட்ரால் மற்றும் இடுப்பு வலிக்கு இடையே உள்ள தொடர்பை அலட்சியம் செய்கிறார்கள். ஏனென்றால் இடுப்பு பகுதியில் வலி ஏற்பட்டாலே பெரும்பாலும் எலும்பு பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. எனவே இடுப்பு தசை வலிகள் மற்றும் கொலஸ்ட்ராலுக்கும் இடையே உள்ள தொடர்பு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ரத்த நாளங்களில் காணப்படும் கொலஸ்ட்ரால் படிவு காரணமாக ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் குறைவதால் ஏற்படும் புற தமனி நோய் (PAD) இடுப்பு, கால்கள் மற்றும் பாதங்களை பாதிக்கின்றன.

அறிகுறிகள்:

அதிகம் தேவை இல்லை, வாக்கிங் போன்ற மிகவும் குறைந்தப்பட்ச உடல்செயல்பாடுகளின் போது இடுப்பு பகுதிகளில் கடுமையான வலியை உணர்வது முதல் மற்றும் முக்கிய அறிகுறியாகும். இந்த வலி பிட்டம், தொடை உள்ளிட்ட தசைபகுதிகளுக்கு பரவ கூடும். எனினும் வலியின் தீவிரம் உடலில் கொலஸ்ட்ரால் இருக்கும் அளவு மற்றும் ரத்த ஓட்டம் தடைபடும் பகுதிகளை பொறுத்து மாறுபடும். ரெஸ்ட் எடுத்தால் இந்த வலி மறைவது பிளா இருக்கும், ஆனால் உடல்செயல்பாடுகளின் போது மீண்டும் வந்துவிடும். தோல் அல்லது நகங்களின் நிறங்களில் ஏற்படும் மாற்றங்கள் PAD-ன் வேறு சில அறிகுறிகள்.

கவனம் தேவைப்படும் பிற அறிகுறிகள்:

கால்களில் இருக்கும் முடி உதிர்தல், கால்களில் உணர்வின்மை, எளிதில் உடைய கூடிய கால் விரல் நகங்கள், ஆறாத கால் அல்லது பாத புண்கள், கால்களில் தசைகள் சுருங்குவது, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு உள்ளிட்டவை. முன்னரே குறிப்பிட்டது போல இடுப்பு வலி எப்போதும் வயதான அல்லது எலும்பு தொடர்பான நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுவதால் அதிக கொலஸ்ட்ராலுடனான தொடர்பை மக்கள் கவனிப்பதில்லை. தவிர உடல் இயக்கத்தில் இருக்கும் போது வலிப்பதும், ஓய்வில் இருக்கும் போது வலி மறைவதுமாக இருப்பதால் முக்கியத்துவம் குறைவாகிறது. பலர் இதை இயல்பான பயாலஜிக்கல் ப்ராசஸாக நினைத்து அசால்ட்டாக இருக்கிறார்கள்.

தவிர்க்க வேண்டியவை:

கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவுகளான கேக், பிஸ்கட், இறைச்சி துண்டுகள், கொழுப்புமிக்க இறைச்சி மற்றும் பாமாயில், கிரீம், ஹார்ட் சீஸ் மற்றும் வெண்ணெய் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். ஊட்டச்சத்து மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்களை டயட்டில் சேர்க்க வேண்டும்.

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment