Search

குளிர்காலத்தில் அதிகரிக்கும் மூட்டு வலிக்கு விட்டமின் டி குறைபாடுதான் காரணம்... தவிர்க்கும் வழிகள்..!

 வைட்டமின் டி ஆரோக்கியத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இது இல்லாமல் உடல் சரியாக செயல்பட முடியாது. மனிதர்களின் எலும்புகள், பற்கள் மற்றும் தசைகள் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைட்டமின் டி உதவும், ஆனால், நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் அதற்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது.

வைட்டமின் டி-யின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளியாக உள்ளது. ஆனால்  குளிர்காலத்தில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதால் சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி தடைபடுகிறது. எனவே விட்டமின் டி குறைபாட்டால் வயதானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

வைட்டமின் டி ஒரு ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும், இது சூரியனில் இருந்து பெறப்பட்ட புற ஊதா கதிர்வீச்சு மற்றும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு நம் உடலில் வைட்டமின் டி இருக்க வேண்டும்.

வைட்டமின் டி பற்றாக்குறையால் இந்தியா முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் டி குறைபாட்டால் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், இதய நோய், மனச்சோர்வு, எடை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இன்றைய வேலைச் சூழலால் சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதற்கான சூழ்நிலைகள் குறைவதால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். இதனால் எலும்பு பிரச்சினைகள், மனச்சோர்வு மற்றும் நரம்பியல் பிரச்சினைகள் உருவாகிறது, இவை அனைத்தும் வைட்டமின் டி குறைபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்

சோர்வு, மூட்டு வலிகள் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, கடுமையான எலும்பு அல்லது தசை வலி, பலவீனம் படிக்கட்டுகளில் ஏற அல்லது தரையில் இருந்து எழுந்திருக்க சிரமம் ஏற்படலாம், மன அழுத்தம், குறிப்பாக உங்கள் கால்கள், இடுப்பு வலி ஏற்பட்டால் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

வைட்டமின் டி-ன் உணவு ஆதாரங்கள்:

* மீன்

* மீன் எண்ணெய்

* முட்டை

* இறால்

* பால்

* தானியங்கள்

* தயிர்

* ஆரஞ்சு சாறு

* காளான்

வைட்டமின் டி உள்ள உணவு வகைகள் எல்லாமே உங்களுக்கு வேண்டிய வைட்டமின் சத்தை கொடுக்க கூடியதுதான். ஆனால் எவ்வித செலவும், வேலையும் இல்லாமல் வைட்டமின் டி சத்து தருவது சூரிய ஒளி மட்டுமே. எனவே தினமும் காலையில் வெயிலில் சிறிது நேரம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு வைட்டமின் டி முக்கியமானது என்பதால் கவனமாக இருங்கள்.

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment