பால் அதிக கொழுப்பு நிறைந்தது மற்றும் அதிக கலோரிகள் கொண்டது, எனவே பால் குடிப்பதால் எடை அதிகரிக்கும் என்று பலரும் பாலை தவிக்கிறார்கள். அதற்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைவான கொழுப்பு கொண்ட பால் வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், எடை குறைக்க வேண்டுமென்ற முயற்சியில் இருப்பவர்கள் குறைவான கொழுப்பு கொண்ட அல்லது கொழுப்பே இல்லாத உணவுகள் மற்றும் பால் வகைகளை சாப்பிடுகிறார்கள்.
இந்தியா முழுவதுமே எடை குறைக்க வேண்டும் என்றால் கொழுப்பு உணவுகளை நீக்க வேண்டும் என்று தவறான வழிமுறையைப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய அத்தியாவசியமான ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்காமல் போகிறது.
பாலில் உள்ள கொழுப்புஆபத்தானது இல்லை :பல ஆண்டுகளாக அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்ட அதாவது கொழுப்பு நீக்கப்படாத பால் சாப்பிடக்கூடாது தவிர்க்க வேண்டும் என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டில் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் பால் பொருட்கள் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கான வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடல் பருமனை தவிர்க்க, குறைவான கொழுப்பு அல்லது கொழுப்பில்லாத பால் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி இந்த குறைவான கொழுப்பு கொண்ட உணவுகளை இந்த வழிமுறைகள் தவறானவை. ஸ்கிம்ட் அல்லது டோன்டு மில்க் என்று கூறப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியமான தேர்வு அல்ல. அதற்கு மாறாக முழு கொழுப்பு நிறைந்த பால் தான் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கொழுப்பு நிறைந்த பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றிய விவரங்கள் :Whole milk எனப்படும் கொழுப்பு நீக்கப்படாத பால், குறைவான கொழுப்பு உள்ள பால் மற்றும் முழுமையாக கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆகிய வகைகளில் எந்த அளவுக்கு கொழுப்பு இருக்கிறது அல்லது நீக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளது. கொழுப்பு நீக்கப்படாத பாலில் 3.25 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. குறைவான low-fat பாலில் 1 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. முழுதும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் கொழுப்பு இல்லை. ஆனால் மற்ற இரண்டு வகைகளில் விட அதிக அளவு வைட்டமின் D சேர்க்கப்படுகிறது.
கொழுப்பு நிறைந்த பால் பற்றிய தவறான புரிதல் :1977 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட ஊட்டச்சத்து வழிமுறைகளின்படி முழுக் கொழுப்புள்ள பாலை தவிர்க்க வேண்டும். அதிக சாச்சுரேட்டட் கொழப்பு இருப்பதால் இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கைடுலைன்களை உண்மை என்று நம்புவதற்கு எந்த அறிவியல் பூர்வமான சான்றுகளும் இதுவரை வழங்கப்படவில்லை.
இதையொட்டி 21 ஆய்வுகளில் நடத்தப்பட்ட அனாலிசிஸ் படி, பாலில் உள்ள கொழுப்புகளுக்கும் இதய நோய் பாதிப்பு அதிகரிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கும் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவது காரணமாக இல்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பு நிறைந்த பால் எடை குறைப்பதற்கு சாதகமாக இருக்கும் :கொழுப்பு உணவுகளை சாப்பிட்டாலே எடை குறைக்க முடியாது, மாறாக எடை அதிகரிக்கத் தான் செய்யும் என்று தவறான கண்ணோட்டத்தில் மக்கள் உள்ளனர். ஆனால் ஆய்வு முடிவுகள் இதற்கு எதிர்மாறான தகவல்களை அறிவித்துள்ளது. அதன்படி 16 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 11 ஆய்வுகளில் கொழுப்பு நிறைந்த பால் குடிப்பதால் உடல் பருமன் குறையும் என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் 18,000 க்கும் மேற்பட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி கொழுப்பு நிறைந்த பால் பொருட்களை சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புடன் சம்பந்தப்படவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் தொப்பை ஏற்படுவதைக் ஆகியவற்றை குறைக்கிறது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஆபத்து குறைய கொழுப்பு நிறைந்த பால் உதவுகிறது :உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தால் பல்வேறு குறைபாடுகள் உண்டாகக்கூடும். உதாரணமாக, இன்சுலின் ரெசஸ்டன்ஸ், உயர் டிரைகிளிசரைடு லெவல், தீவிரமான இதய நோய், உள்ளிட்டவை.கொழுப்பு நீக்கப்படாத பால் சாப்பிடுவதால் மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைகிறத. இதனால் பல்வேறு நோய்கள் தாக்காமல் பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவுகிறது.
0 Comments:
Post a Comment