Search

சிக்கனுடன் இந்த உணவுகளை சாப்பிடவே கூடாதாம்!

 Foods To Avoid With Chicken: சிக்கன் விரும்பியாக இருந்தால், அவற்றுடன் ஒருபோதும் சாப்பிடக்கூடாத உணவுகளை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், கோழி அசைவ உணவுடன் சாப்பிடும் சில உணவுகள் ஆரோக்கியதற்கு மோசமான விளைவுகள் ஏற்படுத்தும். சிக்கன் சாப்பிடும்போது எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

பால் - கோழி

கோழியை பாலுடன் சாப்பிடுவது விஷத்து நிகரானது. பாலும் கோழியும் சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் ஒவ்வாமை ஏற்படலாம். பாலையும் கோழிக்கறியையும் சேர்த்து சாப்பிடுவதும் சரும பிரச்சனைகளை உண்டாக்கும். கோழிக்கறியுடன் பால் சாப்பிடுவதால் பலருக்கு சொறி, வெள்ளைப்புள்ளிகள், அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கோழி மற்றும் தயிர்

பலர் எல்லாவற்றிலும் தயிர் சேர்த்து சாப்பிடுவார்கள். தயிர் எல்லாவற்றின் சுவையையும் அதிகரிக்கிறது, மேலும் இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். சிலர் சிக்கனுடன் தயிரையும் சாப்பிடுவார்கள். தயிரின் விளைவு குளிர்ச்சியாகவும், கோழியின் விளைவு சூடாகவும் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கோழி மற்றும் தயிர் ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மீன் மற்றும் கோழி

சிக்கனுடன் மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. கோழி மற்றும் மீன் இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது, ஆனால் இரண்டிலும் வெவ்வேறு வகையான புரதங்கள் காணப்படுகின்றன. இந்த புரதம் உடலில் வினைபுரியும். இதனால், உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், சிக்கன் மற்றும் மீனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.




0 Comments:

Post a Comment