தற்போது மாறி வரும் வாழ்க்கை முறையால், உணவு முறை மாற்றம், அன்றாடம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாக நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பெரும்பாலானோருக்கு உள்ள பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் பல உடல் நல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், சில பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
உயர் இரத்த அழுத்தம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு நோய். அத்தகைய சூழ்நிலையில், இதனை கட்டுப்படுத்தப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தான பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதனால் மூளையில் இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளது , பக்கவாதம் கூட ஏற்படலாம், எனவே கவனமாக இருப்பது மிகவும் முக்கியம் இத்தகைய சூழ்நிலையில், சில பழங்களை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இன்று அறிந்து கொள்ளுங்கள்.
1. வாழைப்பழம்
வாழைப்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கிடைக்கும் ஒரு பழமாகும். இது மலிவானது என்பதோடு, மிகவும் சத்தானது. இது செரிமானத்தை பலப்படுத்துகிறது என்று சொல்லலாம். வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஒரு சஞ்சீவியாக செயல்படுகின்றன. இதை தினமும் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. பக்கவாதத்திலிருந்து உங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
2. கிவி
கிவி மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த பழம், இதில் பல ஊட்டச்சத்து கூறுகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்கிறது. இது தவிர, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செயல்படுகிறது. இது உடலுக்கு எந்த நோயையும் எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது.
3. மாம்பழம்
கோடை காலத்தில் கிடைக்கும் இந்த பழம் அதன் சுவைக்கு மட்டும் பெயர் பெற்றது இல்லை. பல நோய்களை தடுக்கும். இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படும் நோயாளிக்கு மாம்பழம் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும், பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், இந்த இரண்டு கூறுகளும் BP அளவை கட்டுப்பாட்டில் வைக்க வேலை செய்கிறது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
No comments:
Post a Comment