பால் இல்லாத வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். நம் உணவு பழக்கத்தில் பால் இன்றியாத உணவுப்பொருளாக இருப்பதால்தான் அது அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பால் அத்தியாவசியமாக இருக்க என்ன காரணம்..?
பால் கால்சியம் சத்து மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது என்பதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உணவாக இருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பை கொண்டுள்ளதால் அது உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.
பாலிலும் வகைகள் உள்ளதா..?
அதாவது மாடு கரக்கும் பால் என்பது ஒன்றுதான். அதன் கொழுப்பை பிரிக்கும் அடிப்படையில் பாலின் வகைகள் வேறுபடுகின்றன. அந்த வகையில் முழு பால், டபுள் டோன்ட் பால், டோன்ட் பால், ஸ்கிம்டு மில்க், கொழுப்பு நிறைந்த பால் மற்றும் ஹோமோஜினைஸ்டு பால் என 6 வகைகளில் கிடைக்கின்றன.
இந்த பால் வகைகளில் கொழுப்பு நிறைந்த பால்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆவின் பால் விலை உயர்விலும் கொழுப்பு நிறைந்த பால் என விற்கப்படும் ஆரஞ்சு நிற பாலின் விலை லிட்டருக்கு 60 ரூபாய் உயர்த்தியுள்ளது.
அப்படி என்ன இந்த கொழுப்பு நிறைந்த பாலின் ஸ்பெஷல்..?
கொழுப்பு நிறைந்த பால் என்பது அதன் கிரீம் நீக்கப்படாமல் முழுமையாக கொடுப்பதே ஆகும். இதில் 3.5% கொழுப்பு நிறைந்திருக்கும். உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த பாலாக உள்ளது. அதாவது வைட்டமின் டி, ஏ மற்றும் பி1, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த கொழுப்பு நிறைந்த பாலிலிருந்து கிடைக்கக்கூடிய பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை மேம்படுத்தவும் , வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதோடு வைட்டமின் ஏ சரும ஆரோக்கியத்திற்கும் , நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்த கொழுப்பு நிறைந்த பால், வளர்ந்த குழந்தைகள் , இளம் வயதினர், நடுத்தர வயதினர் மற்றும் பாடி பில்டர்ஸ் ஆகியோர் குடிக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் இந்த பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது என்றும் கூறப்படுகிறது.
பேஸ்டுரைஸ்டு ஃபுல் க்ரீம் மில்க் என்றால் என்ன..?
பொதுவாக நாம் வாங்கும் பால் அனைத்தும் குறிப்பிட்ட வெப்பநிலையில் சூடேற்றப்பட்டு அதன் பாடீரியாக்களை நீக்குகிறது. பின் குளிர்விக்கப்பட்டு கொழுப்பை பிரித்து பாக்கெட் செய்யப்படுகிறது. அப்படி ஆவினில் பிரிக்கப்படும் பாக்கெட்டில் நீல நிறம் மற்றும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளில் கொழுப்பு குறைவாகவும் , ஆரஞ்சு நிற பாலில் நிறைவான கொழுப்பும் உள்ளது.
இந்த கொழுப்பு நிறைந்த பால் 500 டிகிரி செல்சியத்திற்கு மேலான அதிக வெப்பநிலையில் சூடேற்றப்பட்டு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதனால் அதை நீண்ட நாட்களுக்கு கெட்டுபோகாத வண்ணம் சேமித்து வைக்கலாம். இப்படி பேஸ்டுரைஸ் முறையில் பாக்டீரியா நீக்கப்பட்ட பால் என்றால் அது குடிப்பதற்கும் பாதுகாப்பனது.
No comments:
Post a Comment