TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? - Agri Info

Adding Green to your Life

November 30, 2022

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 7301 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 நிலை தேர்வை கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடத்தியது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாநிலம் முழுவதும் 18.5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதத்துக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்ததது.

குரூப்- 4 பதவிகளுக்கான தெரிவு முறை குறித்த விவரங்களை இங்கே காண்போம்.  

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கு பல்வேறு வகையாக தெரிவு முறைகளை (Selection procedure) பின்பற்றுகிறது.

குரூப் 1, குரூப் 2  உள்ளிட்ட பதவிகளுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

சிறைக் காவலர், கல்வித் துறையில் உள்ள நிதியாளர், கால்நடை உதவி மருத்துவர் ஆகிய பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள்  தெரிவு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 நிலை பதவிகளுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

குரூப் 4 தெரிவு முறை:  முதற்கட்டமாக,  குரூப் 4 எழுத்துத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி  தேர்வாணையம் Interactive mode-ல் வெளியிடும். இதில், விண்ணப்பதாரர்கள் தங்களது பதவி எண்- ஐ சமர்ப்பித்து, தங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு இனவாரியான தரவரிசை, சிறப்பு வகை வாரியான தரவரிசை உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.


சில தினங்களுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வின் அடிப்படையில், இளநிலை உதவியாளர்/கிராம நிர்வாக உதவியாளர் (Junior Assistant/VAO), தட்டச்சர்(Typist) , சுருக்கெழுத்தர் (Steno Typist) ஆகிய பதவிகளுக்கு இணைய வழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வானவர்கள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தனித்தனியாக வெளியிடும்.

2018-2019 மற்றும் 2019-202 ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 4499வது இடத்திற்குள் வந்த தேர்வர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 4130வது வரை இடத்திற்குள் வந்த மிக பிற்படுத்தப்பட்ட தேர்வர்களும்,6366வது வரை இடத்திற்குள் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த தேர்வர்களும், 15320 வரைக்குள் வந்த பழங்குடியின தேர்வர்களும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இந்த தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் சான்றிதழ்களை இணையவழியில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் தகுதியினை உறுதிப்படுத்தும் அனைத்து மூலச் சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு:

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்குப் பின்னர், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான, விவரங்களை Interatcive Mode-ல் மூலம் தெரிவிக்கப்படும்.

ஒவ்வொரு, இடஒதுக்கீடு பிரிவுகளிலும் அறிவிக்கப்பட்ட பணி இடங்களை விட இரண்டு மடங்கு பேர்  மூலச்சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர்.  தெரிவுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்த பின்னரே, மூலச்சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிடும்.

கலந்தாய்வு:      

ஒட்டுமொத்த தரவரிசையின் படி, கலந்தாய்வில்    விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர்.

கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள்  Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். `அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.

ஒவ்வொரு நாள் கலந்தாய்வு முடிந்த பிறகும், துறை வாரியாக மாவட்ட வாரியாக, இடஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட பதவிகள் மற்றும் காலிப்பணியிடங்களின் விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.

 Click here to join WhatsApp group for Daily employment news 

No comments:

Post a Comment