தமிழக அரசின் இணையச் சேவை வழங்கும் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தில் (TAMIL NADU FIBRENET CORPORATION LIMITED) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் பாரத்நெட் பாகம் 2 இல் திட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்கான பணிபுரியத் தகுதியான நபர்களைத் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்ய இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கான விவரங்கள் கீழ் வருமாறு:-
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது |
Manager(Finance & Accounts) | 1 | 25-40 |
Manager(HR) | 1 | 26-40 |
General Manager | 1 | 32-40 |
Associate Consultant - NOC & Server | 1 | |
Associate Consultant - Network Security | 1 | |
Associate Consultant - BSS and Helpdesk | 1 | |
Associate Consultant - Operation Support System | 1 |
சம்பளம்:
Manager பதவிகளுக்கு ரூ.1,00,000/- வரை சம்பளமும் General Manager பதவிக்கு ரூ.2,00,000/- வரை சம்பளமும் வழங்கப்படும். Associate Consultant பதவிகளுக்குச் சம்பள விவரம் இடம்பெறவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanfinet.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். Associate Consultant பதவிகளுக்கு மட்டும் தபால் மற்றும் இமெயில் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : Manager/ Associate Consultant
தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Managing Director,
Tamil Nadu FibreNet Corporation Limited,
Door.No.807, 5th Floor,P.T.Lee Chengalvaraya Naicker Trust, Anna Salai, Chennai - 600002.
இமெயில் முகவரி : tanfinet@tn.gov.in
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45 மணி வரை.
No comments:
Post a Comment