தமிழக வனத்துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.45,000/- || விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாடு வனத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Veterinary Assistant Surgeon, Biologist பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
தமிழக வனத்துறை பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Veterinary Assistant Surgeon, Biologist பணிகளுக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Forest கல்வி தகுதி:
இப்பணிக்கு வ்விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.V.Sc, M.Sc, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறை வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
TN Forest ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Veterinary Assistant Surgeon – ரூ.45,000/-
- Biologist – ரூ. 40,000/-
தமிழக வனத்துறை தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தமிழக வனத்துறை விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் 10.01.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment