Search

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.58000 வரை சம்பளத்தில் வேலை... முழு விவரம் இதோ

 

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
அலுவலக உதவியாளர்2ரூ.15,700-58,100/-

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 34 ஆகவும் மற்றும் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஆதிதிராவிடர் & பழங்குடியினர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 53 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு முன்னாள் இராணுவத்தினருக்கு அதிகபட்ச வயது 48 ஆகவும் உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://skilltraining.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதனுடன் புகைப்படங்கள், சான்றிதழ்கள் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://skilltraining.tn.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர்,

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்,

காசிபாளையம், ஈரோடு - 638009.

தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி நாள் : 30.12.2022 மாலை 5.45.


Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment