பழங்களை சாப்பிடும்போது தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்: பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் பழங்களில் உள்ளன. அவை நம் உடலின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன. மறுபுறம், பழங்கள் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறன. பழங்களில் கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
பழங்களை சாப்பிடும்போது, நாம் சில முக்கிய விஷயங்களை கவனித்துக்கொள்ள வேண்டும். பழங்களை உட்கொள்ளும்போது நாம் கவனித்தில்கொள்ள வேண்டிய சில இன்றியமையாத அம்சங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பழங்களை சாப்பிடும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்:
பழங்களை கலந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்:
மற்ற உணவுகளை விட பழங்கள் நம் உடலில் வேகமாக உடைந்து ஜீரணத்திற்கு எளிதாகிவிடும். ஆனால் பழங்களை மற்ற பொருட்களுடன் கலக்கும்போது, அது உடலில் நச்சுகளை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இதனால் செரிமானம் மிக மெதுவாக நடக்கிறது. நீங்கள் பலவிதமான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிட்டால், அது உங்கள் செரிமானத்தை மோசமாக பாதிக்கிறது. எனவே இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
இரவில் பழம் சாப்பிடுவது
இரவில் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. இது உங்கள் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. பழங்களில் இயற்கையான சர்க்கரை காணப்படுகிறது. நீங்கள் தூங்கும் முன் பழங்களை உட்கொண்டால், சர்க்கரை உங்கள் உடலை சென்றடைகிறது. இது உங்கள் தூக்கத்தை கெடுக்கும். அதுமட்டுமின்றி, தூங்கும் முன் பழங்களை உட்கொண்டால், அசிடிட்டி பிரச்சனையும் வரலாம். ஆகையால்தான் தூங்கும் முன் பழங்களை சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகின்றது.
பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது:
பலர் பழங்களை சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பார்கள், ஆனால் அவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகையால் இந்த பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment