திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிடும் பொருட்டு 13.12.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி (Walk In Interview) நடைபெற உள்ளது.
எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
காலியிடங்கள் விவரம்:
நிபந்தனைகள்:
நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை பெற்றுள்ள நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakings) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/ என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து,விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம்(Self Attested) செய்யப்பட்ட நகல்களை இணைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
கீழே கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
இந்த காலிப்பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:
அறை எண்.240 - DME / 120 - DPH&DMS, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு திருப்பூர். நாள்: 13.12.2022 நேரம்: 10.00 முற்பகல் முதல் பிற்பகல் 2 மணி வரை மேலும் தொடர்புக்கு தொலைபேசி எண். 0421-2478503 ஆகும்.
No comments:
Post a Comment