தொற்றுகள் எளிதாக பரவும் என்பதால் குளிர்காலம் ஒரு கடினமான பருவம். பொதுவாக சீசன் மாறும் போது உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக குளிர் சீசனில் நிறைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
குளிர் காலத்தில் சில உணவுகள் எடுத்து கொள்வது நம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு குளிர்காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சீசன் ஆகும். குளிர் சீசனில் ரத்த ஓட்டத்தை பராமரிக்க இதயம் 2 மடங்கு கடினமாக வேலை செய்யும் சூழல் ஏற்படும். எனவே குளிர்காலத்தில் ஆரோக்கியமான இதயத்திற்கான உணவுகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
குளிர் காலத்தில் குறைந்த வெப்பநிலை காரணமாக ரத்த தமனிகள் சுருங்கக்கூடும். இதனால் இதய தசைகளுக்கு குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் குறைந்த ஊட்டச்சத்துக்களே கிடைக்கும். இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்திற்காக எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி பகிர்ந்து கொள்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ரோஹித் ஷெலட்கர்.
ஆரோக்கிய உணவுகள்:
ஓட்மீல்:
உடலுக்குத் தேவையான பல வைட்டமின்கள் இதில் உள்ளன. ஓட்மீல்-ல் நிறைந்திருக்கும் ஜிங்க் மற்றும் ஃபைபர் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் வழக்கமான காலை உணவாக ஓட்ஸை சேர்த்துக் கொள்ளலாம்.
சிட்ரஸ் பழங்கள்:
இதை ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் குளிர் சீசனில் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, தக்காளி மற்றும் நெல்லி போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். சிட்ரஸ் பழங்களில் அடங்கியிருக்கும் ஃபிளாவனாய்ட்ஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட இரண்டும் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் கொலஸ்ட்ராலை அதிகரிக்கின்றன. இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது.
முழு தானியங்கள்:
முழு தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை. இவை இதயம் மற்றும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் முக்கிய பல ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. நூடுல்ஸ் மற்றும் ஸ்பாகெட்டி போன்ற இன்ஸ்டன்ட் ஃபுட் பாகெட்ஸ்களில் பொதுவாக காணப்படும் மைதாவிற்கு பதில் பஜ்ரா, மக்கி, பார்லி, கினோவா, ஓட்ஸ், பக்வீட் மாவு மற்றும் ராகி போன்றவற்றை டயட்டில் சேர்க்கலாம்.
வேர் காய்கறிகள்:
வேர் காய்கறிகளில் வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், வைட்டமின் சி உள்ளிட்ட பல மற்றும் மினரல்ஸ் அதிகம். இவை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டு இதயம், ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எனவே கேரட், டர்னிப்ஸ், ஸ்வீட் பொட்டேட்டோ, உருளைக்கிழங்கு மற்றும் பீட் போன்ற வேர் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டியவை:
- ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வறுத்த உணவுகளான பூரி, பரந்தா, பகோரி, கச்சோரி மற்றும் நம்கீன்ஸ்களை தவிர்த்து வெண்ணெய் & எண்ணெயை நுகர்வை கட்டுப்படுத்த வேண்டும். 10%-க்கும் குறைவான கொழுப்புள்ள இறைச்சிகளை தேர்ந்தெடுத்து சாப்பிடவும்.
- அதிக சர்க்கரை நுகர்வு குளிர் சீசனில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கலாம். இனிப்புகள் நிறைந்த உணவுகளை குளிர் சீசனில் அதிகம் சாப்பிடுவது வீக்கத்தை அதிகரிக்கிறது மற்றும் இதனுடன் தொடர்புடைய வலி நோய் எதிர்ப்பு சக்தியைவெகுவாக குறைக்கிறது. மேலும் சுவாச கோளாறுகளும் ஏற்படும். மொத்தத்தில் வறுத்த உணவுகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை அல்லது கொலஸ்ட்ரால் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
குளிர்காலத்தில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை பேணுவது முக்கியம். வெளியே சென்று ஒர்கவுட்ஸ்களில் ஈடுபட முடியாவிட்டாலும் வீட்டிற்குள்ளேயே நடனம், யோகா, மிதமான ஏரோபிக்ஸ் மற்றும் எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். வழக்கமான உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உடலை சூடாக வைக்க உதவுகிறது.
No comments:
Post a Comment