மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு - Agri Info

Education News, Employment News in tamil

December 26, 2022

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... நேரடி நியமனத்தில் நிரப்ப அறிவிப்பு வெளியீடு

 மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தன்னாட்சி அமைப்பான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் (NIRD & PR), ஐதராபாத் ஆகும். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட் ஆனது ஊரக வளர்ச்சியில் பயிற்சி,ஆராய்ச்சி, நடவடிக்கை ஆராய்ச்சி மற்றும் கன்சல்டன்சி செயல்பாடுகளை மேற்கொள்கிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய இன்ஸ்ட்டியூட்டில் தற்போது உள்ள டைரக்டர் ஜெனரல் பதவிக்கான காலியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணி டெபுடேசன் மற்றும் நேரடி ஆள்சேர்ப்பு வகையில் நிரப்பப்படவுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்டைரக்டர் ஜெனரல்
சம்பளம்ரூ.37,400-67,000/- + GP ரூ.10,000/-
வயது வரம்புநேரடி நியமனத்திற்கு 50 வயதிற்குக் கீழ் இருக்க வேண்டும். டெபுடேசன் பிரிவில் 56 வயது அதிகபட்சமாக இருக்கலாம்.


கல்வித்தகுதி:

டெபுடேசன் பிரிவில் தேர்வு செய்ய குருப் அ பிரிவில் அரசின் பணி புரிந்திருக்க வேண்டும். நேரடி நியமனத்திற்கு சமூக அறிவியல் பிரிவில் Ph.D., பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பதார்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில் நேர்காணல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : http://nirdpr.org.in/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர் (பயிற்சி),

ஊரக வளர்ச்சி அமைச்சகம், ஊரக வளர்ச்சித் துறை, கோர் - 4B(UG), இந்தியா வசிப்பிட மையம், லோதி ரோடு, புதுடெல்லி - 110003.

தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் :30.12.2022

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment