உணவு மூலமே தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியுமா..? எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..? - Agri Info

Adding Green to your Life

December 27, 2022

உணவு மூலமே தைராய்டு பிரச்சனையை சரி செய்ய முடியுமா..? எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்..?

 ஹைப்போதைராய்டிசம் என்பது உடலில் தைராய்டு சுரப்பிகள் தேவைக்கு குறைவாக சுரப்பதனால் உண்டாகும் ஒரு உடல்நல கோளாறு ஆகும். உடலின் வளர்ச்சிதை மாற்றங்கள் செல்களை சரி செய்வது செல்களின் வளர்ச்சி மற்றும் சில முக்கிய உடல் உறுப்புக்களின் செயல் இருக்கும் தைராய்டு சுரப்பிகள் முக்கிய பங்காற்றுகின்றனர். ஹைப்போதைராடிசம் குறைபாடு உள்ளவர்கள், தலை முடி உதிர்தல், மயக்கம், உடல் எடை கூடுதல், மனதளவில் ஏற்படும் மாற்றங்கள், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இதன் காரணமாக எப்போதும் ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்ற உடலுக்கு கெடுதல் தரும் உணவு பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலமே தைராய்டு பிரச்சனை ஏற்படாமலும், அப்படியே தைராய்டு பிரச்சினை இருந்தாலும் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியும்.

வைட்டமின் பி :

வைட்டமின் பி ஊட்டச்சத்தானது தைராய்டு சுரப்புகளின் உற்பத்திக்கும் அவர்களின் செயல்பாட்டிற்கும் முக்கிய பங்காற்றுகிறது மேலும் கல்லீரல் பிரச்சனை உள்ளவர்களுக்கும், ஹைப்போதைராய்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த ஊட்டச்சத்து இன்றியமையாதது ஆகும்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்க வேண்டும் :

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவை உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை அதிகரித்து விடுகின்றன. இதனால் தைராய்டு ஹார்மோன்களில் சமநிலையற்ற தன்மை உண்டாகிறது. இதன் காரணமாகவே தைராய்டு சம்பந்தப்பட்ட கோளாறுகள் உண்டாகின்றன. அதிக அளவு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளையும் கார்போஹைட்ரேடுகளையும் உட்கொள்ளும் போது வளர்ச்சிதை மாற்றத்தை தடை செய்யும் உடல் நலக் கோளாறுகள் உண்டாகி தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

இறைச்சி உணவுகள்:

தினசரி உணவில் உடலுக்கு தேவையான புரத சத்துக்கள் நிறைந்துள்ளவாறு உணவை உட்கொள்ள வேண்டும். இறைச்சிகளில் அதிக அளவு புரதச்சத்தும், அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் இவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை போதுமான அளவு வழங்குகின்றன. முக்கியமாக கல்லீரலானது தைராய்டு சுரப்பிகளை சரிப்படுத்தும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. வைட்டமின் எ, ஹார்மோன் சுரப்பிகளை கட்டுப்படுத்தியும், தைராய்டு சுரப்பிகள் சுரப்பதை சரியான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்வதன் மூலம் உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நிகழ்வதை உறுதி செய்கிறது.

கோய்ட்ரோஜன்ஸ்

கோட்ரோஜன்கள் தாவர உணவு வகைகளின் அதிகமாக காணப்படுகின்றன. முக்கியமாக புரோக்கோலி, காலிபிளவர், முட்டைகோஸ், கீரை, வேர்க்கடலைகள் ஆகியவற்றில் இவை அதிகமாக காணப்படுகின்றன..

உணவில் அயோடினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் :

உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு அயோடின் குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலின் தைராய்டு சுரப்பதை ஊக்கப்படுத்தும் முக்கிய காரணியாக அயோடின் உள்ளது. இதன் காரணமாக உங்களுக்கு ஹைபோதைராய்டிசம் ஏற்பட்டால் உங்கள் உணவில் அயோடின் அளவை சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது.


செலினியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் :

தைராய்டு சுரப்பிகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு தாது செலினியமாகும். கிடைத்த தரவுகளின் படி செலினியமானது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் தைராய்டு சுரப்பிகள் சரியாக வேலை செய்வதற்கும் உதவி புரிகிறது. நட்ஸ், முட்டைகள் போன்ற உணவு வகைகளில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.

ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் தவிர்க்க வேண்டும் :

தாவர உணவு வகைகளில் அதிக அளவில் ஆண்டி நியூட்ரியன்ட்ஸ் காணப்படுகின்றன. இதனால் ஹைப்போதைராடிஸ்ம் உள்ளவர்களுக்கு இது மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். ஆன்ட்டி நியூட்ரியன்ட்ஸ் அதிகம் நிறைந்த தாவர உணவுகளை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். தாவர உணவை ஊறவைத்தும், சமைத்தும் உண்பதின் மூலம், அதில் உள்ள ஆண்டி நியூட்ரியன்ட்ஸ் நம்மால் குறைக்க முடியும்.

தைராய்டு பிரச்சினையை சரி செய்வதற்கு அதன் மூல காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் மிக எளிதாக சரி செய்து விடலாம். மேலும் உணவுப் பழக்கத்தை சரிப்படுத்துவதன் மூலமே மிக எளிதாக தைராய்டு பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment