பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்.. - Agri Info

Adding Green to your Life

December 6, 2022

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்..

 

பல் சொத்தை ஏற்படாமல் இருக்க சில வழிகள்

சுத்தமாகப் பராமரியுங்கள்

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால் பற்களில் சொத்தை ஏற்படும். அதனால் பற்களைச் சுத்தமாகப் பராமரிப்பது மிக முக்கியம். காலை எழுந்தவுடனும் இரவு தூங்கும் முன்பும் மறக்காமல் பற்களைச் சுத்தமாகத் துலக்க வேண்டும். பற்களில் கறை படியாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். அதேபோல பற்களை அரைகுறையாகத் துலக்கக் கூடாது. சரியான வழியில் துலக்கினால் மட்டுமே இடுக்குகளில் புகுந்து அழுக்குகள் அனைத்தும் வெளியேறும்.

இவற்றைச் செய்யாதீர்கள்

குண்டூசி,ஹேர் பின் போன்ற கூர்மையான பொருட்களை வைத்து பற்களை நோண்ட வேண்டாம். இது பற்களையும் வேர்களையும் பாதிக்கும். சில சமயம் ஈறுகளில் புண் ஏற்பட்டு வீக்கம் வந்து விடும். சில சமயங்களில் சீழ் கூட பிடித்துவிடும்.

எனவே இவற்றைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதேபோல வெற்றிலை ,பான்மசாலா ,புகையிலை போன்றவை பற்களின் ஆரோக்கியத்தைச் சிதைக்கும். இவை அனைத்துமே முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

பரிசோதனை

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என்ற அளவில் பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எந்த பிரச்சனையையும் முளையிலே கிள்ளி விட்டால் பெரிய பிரச்சனைகள் வராமல் தடுத்துக் கொள்ள முடியும்.

பழ வகைகள்

அன்னாசி ,ஆரஞ்சு மற்றும் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். பற்களில் சொத்தை ஏற்படாமல் தடுக்கப்படும். இந்த பழ வகைகளில் நிறைந்துள்ள விட்டமின் சி சத்து பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகளவு கைகொடுக்கும்.



 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment