சத்து குறையாமல் காய்கறிகளை சாப்பிட... - Agri Info

Education News, Employment News in tamil

December 27, 2022

சத்து குறையாமல் காய்கறிகளை சாப்பிட...

 இன்றைய காலக்கட்டத்தில் ரசாயன கலப்பு மற்றும் ஊட்டச்சத்து உணவு குறைபாடு காரணமாக வளர் இளம்பெண்கள் ரத்த சோகையினாலும், பிற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை தவிர்க்க கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றலாம். 

* காய்கறிகளை வெட்டுவதற்கு முன்பு நல்ல தண்ணீரில் 10 முதல் 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். அப்போது தோலில் உள்ள பூச்சி மருந்துகளின் தாக்கம் குறையும்.

 * காய்கறிகளை வெட்டிய பிறகு எக்காரணம் கொண்டும் கழுவக்கூடாது. 

* கருணைக்கிழங்கு தவிர, பிற கிழங்கு வகைகளை குறைவாக பயன்படுத்த வேண்டும். 

* மாவுச்சத்து மிகுந்த, கடினமான காய்கறிகளை மட்டும் அதிக நேரம் வேக வைக்கலாம். கொடிக்காய்கள், நீர்ச்சத்து மிகுந்த காய்களை 3 அல்லது 5 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது. 

* காய்கறிகளை எண்ணெய்யில் வதக்குதல், பொரித்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 

* ஈரமான பருத்தித்துணி அல்லது மண்பானை, பிரிட்ஜ் ஆகியவற்றில் காய்கறிகளை பாதுகாக்கலாம்.

 * கேரட், தக்காளி, வெள்ளரி, தேங்காய், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பயன்படுத்த வேண்டும். 

* காய்கறிகளை வேக வைக்க தேவையான அளவு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். அந்த தண்ணீரை வீணாக்காமல் பருகலாம்.

* ஒவ்வொரு பருவகாலங்களிலும் விளையும் காய்கறிகளை மட்டும் பயன்படுத்துவது மிக சிறந்தது ஆகும்.


 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment