Search

NHPC நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள்- டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு!

 

NHPC நிறுவனத்தில் 400+ காலிப்பணியிடங்கள்- டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பரான வாய்ப்பு!

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனம் ஆனது Trainee Engineer(Civil ),Trainee Engineer(Electrical) Trainee Engineer(Mechanical), Trainee Officer (Finance), Trainee Officer(HR) ,Trainee Officer(Law) பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NHPC காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer(Civil )பணிக்கு – 136 பணியிடங்களும்
  • Trainee Engineer(Electrical) பணிக்கு – 41 பணியிடங்களும்
  • Trainee Engineer(Mechanical) பணிக்கு – 108 பணியிடங்களும்
  • Trainee Officer (Finance ) பணிக்கு – 99 பணியிடங்களும்
  • Trainee Officer(HR ) பணிக்கு – 14 பணியிடங்களும்
  • Trainee Officer(Law) பணிக்கு – 03 பணியிடங்கள் என மொத்தம் 401 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NHPC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NHPC கல்வி தகுதி:
  • Trainee Engineer(Civil ),Trainee Engineer(Electrical) Trainee Engineer(Mechanical) பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering /Technology பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 60% மதிப்பெண்களுடன் AMIE பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer (Finance ) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் CA / ICWA / CMA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer(HR) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post Graduate degree / master degree / Post Graduate diploma/ Post Graduate program in management/ MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Trainee Officer(Law) பணிக்கு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NHPC ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியமாக பெறுவார்கள்.

NHPC தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் Merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:
  • General ,EWS,OBC பிரிவினருக்கு ரூ.295/- விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
  • ST /SC /PWBD /EX-servicemen மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
NHPC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.nhpcindia.com) மூலம் விண்ணப்ப படிவம் பெற்று, பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது .


0 Comments:

Post a Comment