தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கள்ளக்குறிச்சி மண்டலத்தில், 2022-23 காரீப் பருவ கொள்முதல் பணிக்காக பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
பதவியின் பெயர் | காலி இடங்கள் | சம்பளம் | கல்வித் தகுதி |
பருவகால பட்டியல் எழுத்தர் (ஆண்/பெண்) | 20 | ரூ.5,285+ரூ.3,499/- (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ.120 | இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
பருவகால உதவுபவர் (ஆண்/பெண் ) | 40 | ரூ.5,218+ரூ.3,499/- (அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 | 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
பருவகால காவலர் (ஆண்கள் மட்டும்) | 150 | ரூ.5,218+ரூ.3,499/-(அகவிலைப்படி) பணிநாள் ஒன்றுக்கு போக்குவரத்துப் படி ரூ.100 | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
மேற்காணும் தகுதியுடைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட விண்ணப்பதாரர்கள் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல்களுடன் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே 07.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் மண்டல அலுவலகத்தில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதுநிலை மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், சேலம் தேசிய நெடுஞ்சாலை, மாடூர், சுங்கச்சாவடி அருகில், கள்ளக்குறிச்சி-606202 ஆகும்.
No comments:
Post a Comment