Search

ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன்... நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் பயன்பெறுவது எப்படி?

 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 50% பேர் நகர்ப்புற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அதே சமயம், ஒட்டு மொத்த நகர மக்கள் தொகையில் (3.5 கோடி), கிட்டத்தட்ட 60 லட்சம் பேர் நகரத்தின் குடிசைப் பகுதிகளில் (Slum Dwellers) வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நகர்ப்புற வாசிகளில், பெரும்பாலானவர்கள், தரமில்லாத உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு இல்லாத வேளைகளில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று பொது முடக்க காலத்தில், கட்டுமானம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளை பலத்த  அடியைச் சந்தித்தன. இந்த துறைகள் தான் நகர்ப்புறங்களில் வாழும் அடிதட்டு மக்களுக்கு வருவாய் தரும் துறைகளாகவும், அதிகம் வேலைவாய்ப்பும் உருவாக்கும் துறைகளாகவும் இருந்து வந்தன. எனவே, தற்போது நிலவும் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக,  வேலைவாய்ப்பு  குறைந்து மிகவும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

கிராமப்புறங்களில் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்களுக்கும் பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், தேசியளவில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு ஊதியம் வழங்கும் திட்டம் இதுநாள் வரை கொண்டு வரப்பட வில்லை. தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள்  தற்போது இத்திட்டங்களை சோதனை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

நகர்ப்புற வேலைவாய்ப்பு: 

100 நாள் வேலைவாய்ப்பு போன்ற திட்டத்தை நகர்புறங்களிலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் இருந்தாலும், நாட்டில் ஏற்கனவே நகர்ப்புற ஏழைகளுக்கு சில வேலைவாய்ப்புத் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும்,  இத்தகைய திட்டங்கள், 100 நாள் வேலைத் திட்டத்தைப் போன்று , ஏழைகளின் உழைப்பு ஊதியத்தை  சட்டப்பூர்வ  தேவையாக அங்கீகரிக்கவில்லை. மாறாக, சில குறிப்பிட்ட பயனாளர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயனடையும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் /மகளிர் திட்டம்: 

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள நகர்ப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக 1997 ஆம் ஆண்டு Swarna Jayanti Shahari Rozgar Yojan என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டம் கடந்த 2013ம் ஆண்டு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் (National Urban Livelihood Mission) கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த புதுப்பிக்கபட்ட திட்டம், தனிமனித ஊதிய வேலைவாய்ப்புக்குப் பதிலாக, மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்ற வலுவான சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, தரமதிப்பீடு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்கு ஆதார நிதியாக குழு ஒன்றுக்கு ரூ.10,000/- வீதம் மானிய நிதி வழங்கப்படுகிறது. அதேபோன்று, சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் (Self Employment Program Individual (SEP I) ) கீழ், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வறுமை நிலையில் இருந்து முன்னேறிய நபர் ஒருவருக்கு  அதிகபட்சமாக  ரூ.50,000 வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கிக் கடனுக்கு எந்தவித அடமானங்களும் தேவையில்லை.

அதேபோன்று,  சுய  வேலைவாய்ப்பு சுய உதவிக் குழு திட்டத்தின் கீழ் (சுய வேலை வாய்ப்பு தனிநபர் திட்டத்தின் கீழ்  (Self Employment Program Self Help Group (SEP - SHG)) குறைந்தது 5 நபர்களைக் கொண்டு சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாக  ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடன் உதவி மூலம், வருவாய் தரும் திட்டங்களில் சுயஉதவிக் குழுக்கள் ஈடுபடலாம்.

மேலும், நகரப்புற சுய உதவிக்குழுக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொள்ள விதமாக ,  நிதி   நேரடி வங்கி கடன் இணைப்பு   திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் கீழ், சுய உதவிக்குழுக்களுக்கு பிணையம் இல்லா அதிகபட்ச கடன் தொகை ரூ.20 இலட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, நகர்ப்புறப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள், தங்கள் பகுதிகளில் செயல்பட்டு வரும் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக விண்ணப்பித்து பயனடையலாம். அல்லது உங்கள் பகுதியில் வசிக்கும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட 12 முதல் 20  உறுப்பினர்களாகக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயன்பெற தொடங்கலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களை, மாவட்ட நகர்ப்புற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்த இயக்கத்தை  செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தையும் அணுகலாம்.

Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment