அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் நோக்கோடு தனியார் துறைகளில் பணிவாய்ப்பினை பெற்று வழங்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட அளவில் நடத்தப்படவுள்ளது.
வேலைவாய்ப்பு நடைபெறும் இடம்: மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயன்கொண்டம்.
நாள்: 28.01.2023, சனிக்கிழமை
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, செவிலியர், மருந்தாளுநர், ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
இதில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான 20,000க்கும் மேற்பட்ட பணியாட்களை தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தேர்வு செய்தவர்களுக்கு அன்றே பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளுகக்கு ஏற்ற வேலைவாய்ப்பு ஏற்பாடுசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலைதேடுபவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/Home/jobs என்ற இணையதளத்தில் தங்கள் கல்வி தகுதியினை பதிவு செய்து பணிவாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதேபோன்று, அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த தனியார்த்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் இம்முகாமில் பங்கேற்பதற்கு ஏதுவாக 20.01.2023-க்குள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 04329-228641 அல்லது 9499055914 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment