சுற்றுலா என்பது மனதிற்கு இனிமைத் தரக்கூடிய ஒரு சுகமான பயணம்.. என்ன தான் ஆண்டு முழுவதும் வேலைப்பார்த்தாலும் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு ஒரு ட்டீப் போன எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்தும் பறந்தோடிவிடும். அதிலும் இயற்கை எழில் கொஞ்சம் இடங்கள் என்றால் அதை விட்டு வரவே நமக்கு மனம் இருக்காது. இதோ இந்த 2023 ஆம் ஆண்டில் நீங்கள் டூர் போக ப்ளாண் பண்ணிருந்தா? இதோ அதற்கான சிறந்த இடங்கள் என்னென்ன இந்தியாவில் உள்ளது என முதல்ல தெரிஞ்சுக்கோங்க. இதோ அந்த லிஸ்ட் உங்களுக்காக…
தால் ஏரி, ஸ்ரீநகர் : இந்தியாவின் வடக்கு எல்லையில் ஸ்ரீநகரில் அமைந்துள்ள ஏரி தான் தால் ஏரி. சுமார் 26 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கம் இந்த ஏரி, ஸ்ரீ நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான மற்றும் முதன்மையான ஒன்றாக உள்ளது. இமயமலையை பின்னணியாகக் கொண்டிருக்கும் இந்த ஏரியில் மரப்படகு மிகவும் புகழ் பெற்றது. இதில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளில் இயற்கையில் அழகைக் கண்டு ரசிக்கலாம். சூரிய அஸ்தமானத்தை படகில் பயணம் செய்து பார்க்க முடியும். இதோடு நீச்சல் போட்டிகள், நீர் சறுக்குதல், கேனோயிவ் ஆகியவை இந்த ஏரியில் உள்ள புகழ்பெற்ற விளையாட்டாகும்
வாரணாசி, உத்தரபிரதேசம் :உலகின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாக உளளது வாரணாசி. ஆன்மீக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இடம் நல்ல தேர்வாக அமையும். சிவனின் அனுக்கிரகம் இருக்கும் ஊர் காசி என்றும் அழைக்கப்படுகிறது. காசியில் நீராடினால் செய்த பாவங்கள் அனைத்தும் போகும் என்பது ஐதீகம். சுற்றுலா செல்ல விரும்புவோர் இங்கு செல்லலாம். நீங்கள் ஆண்டுமுழுவதும் நினைவில் இருக்கும் படியான பல புகைப்படங்களை எடுப்பதற்கும் இங்கே பல இடங்கள் உள்ளது.
பாங்காங் ஏரி, லடாக் : நீங்கள் மிகவும் சுவாரஸ்சியமான இடங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் இதற்கு நல்ல தேர்வு பாங்காங் ஏரி தான். இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியில் உள்ள லே மாவட்டத்தின் கிழக்கில் இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மலைகளுக்கு இடையே கண்களைக் கொள்ளைக் கொள்ளுதம் அழகான ஏரி, அதன் பின்னால் பனியால் மூடப்பட்ட மலைகள் என எந்த திசையில் இருந்து பார்த்தாலும் நமது கண்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் மாற்றம் இல்லை. குறிப்பாக பாங்காங் ஏரி உப்பு நீர் ஏரியாக இருந்த போதும், குளிர்காலங்களில் இதிலுள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துவிடுவதும் பார்ப்பதற்கு அழகு தான். ஒருவேளை நீங்கள் இந்த இடத்திற்கு செல்வதற்கு ப்ளான் செய்திருந்தால் எப்போதும் உங்களது கேமிராவை ஆன் செய்து வைக்கவும். ஏனென்றால் அந்த அளவிற்கு இயற்கையின் அழகு கெட்டிக்கிடக்கிறது.
ஆலப்புழா, கேரளா : கேரளா மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருந்தாலும் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லம் குடும்பத்தோடு செல்வதற்கு ஏற்றது. மிகப்பெரிய ஏரியில் படகில் பயணித்து கேரளத்தின் அழகை ரசிக்கலாம்
ஷில்லாங், மேகாலயா : வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள இடம் தான் ஷில்லாங். கடல் மட்டத்தில் இருந்து 1525 மீட்டர் உயரத்தில் உள்ள மலை வாழிட நகரம் தான் இது. மலையில் இயற்கையின் அழகோடு பயணம் செய்து சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து தான். எப்போதும் குளிராக இந்த நகரம் கிழக்கின் ஸ்காட்லாந்து என்றும் அழைப்பார்கள்.
வேலி ஆப் பிளவர்ஸ் நேஷனல் பார்க், உத்தரகாண்ட் : இயற்கையை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற இடம் தான் வேலி ஆப் பிளவர்ஸ் நேஷனல் பார்க். இமயமலைப் பகுதியில் உத்தரகாண்டில் அமைந்துள்ள இடத்தில் அழகு நிறைந்த வித்தியாசமாக மலர்களைக் காணலாம்.. மலர் பள்ளதாக்கில் எங்கு பார்த்தாலும் கலர்புல்லான மலர்கள் எப்போதும் கண்களுக்கு விருந்து தான்.
கோவா : இந்தியாவின் மேற்கு கரையில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். நண்பர்களோடு பயணம் செய்வதற்கு ஏற்ற இடம் தான் இது. எங்கு பார்த்தாலும் கடற்கரை ரிசாட், சன் பாத், கடற்கரையில் விளையாட்டு என சுற்றுலாவிற்கு ஏற்றது
கட்ச் பாலைவனம், குஜராத் : மலைகள், ஆறுகள், ஏரிகள், மலர்கள் என ரசிப்பது போதும் என்று நினைத்தால் நீங்கள் குஜராத்தில் உள்ள கட்ச் பாலைவனத்திற்கு டூர் ப்ளான் பண்ணலாம். பாலைவனத்தில் வாக்கிங், அங்குள்ள விலங்குகளைப் பார்ப்பது ஒரு புதுவித அனுபவமாக இருக்கும்.
இதுப்போன்று இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கஜியார் போன்ற இடங்களும் சுற்றுலாவிற்கு சிறந்த இடங்கள் தான். இது மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் சுற்றுலாவிற்கு ஏற்ற பல்வேறு இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment