தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு! - Agri Info

Adding Green to your Life

January 7, 2023

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!



Home  news  தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்...

newsதமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

By

 Deepika

-

 January 7, 2023

0

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் வரும் 21ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

தருமபுரியில் ஜனவரி 21ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

ஜனவரி 21ம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா – கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி, தர்மபுரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் 8 வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெறலாம். இந்த முகாம் மூலம் 10000+ காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment