சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 211 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள் - Agri Info

Adding Green to your Life

January 6, 2023

சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையில் 211 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை நகர்ப்புற சுகாதார  இயக்கத்தின் கீழ், சென்னை மாநகராட்சியில்  செயல்பட்டு வரும் சுகாதார மையங்களில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:  211

பணிகாலியிடங்கள்கல்வித் தகுதிதொகுப்பூதியம்ஆய்வக நுட்புநர் பணி (Lab Technician)19-
ஆய்வக நுட்புநர் படிப்பில் DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;- ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.13,000/- 

மருந்தாளுனர்4உயர்கல்வி தேர்ச்சி , மருந்தாளுனர் துறையில் பட்டயப்படிப்புஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.15,000/-

செவிலியர்  (Auxiliary Nurse Midwife/Lady Health Visitors)183உயர்கல்வி தேர்ச்சி , செவிலியர் துறையில் 2 ஆண்டு பட்டயப்படிப்புஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.14,000/- 

எக்ஸ்-கதிர் வீச்சாளர்7எக்ஸ் -கதீர்வீச்சு படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-

அறுவை சிகிச்சை உதவியாளர்  (Operation THeatre Assistant)5Operation THeatre தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.8,400/-

Ophthalmic Assistant3Ophthalmic Assistant படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியம் : ரூ.12,000/-

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Member Secretary,

Chennai City Urban Health Mission,

Public Health Department, Rippon Buildings,

Chennai - 600 003

https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 044 - 25619330, 25619 290 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பபங்கள் நேரிலோ/ தபால் மூலமாகவோ அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment