பாரதியார் பல்கலை கழகத்தில் பணி ..ரூ.25,000 மாத ஊதியம் – நேர்காணல் மட்டுமே! - Agri Info

Education News, Employment News in tamil

January 2, 2023

பாரதியார் பல்கலை கழகத்தில் பணி ..ரூ.25,000 மாத ஊதியம் – நேர்காணல் மட்டுமே!

 பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்பணியை பற்றிய விவரங்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பல்கலைக்கழக பணி:

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் துரிதமாக பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. வேலைவாய்ப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக மாநில அரசு பெருமிதம் அடைந்துள்ளது. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளுக்கும் அரசு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கள ஒருங்கிணைப்பாளர் பணிக்கு கலை/சமூக அறிவியல்/மனித நேயம் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டமும், நல்ல தொடர்பு திறன் உடையவராகவும் இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவை கொண்டிருக்க வேண்டும். இப்பணிக்கு மாதம் ரூ.20,000 + 5000 ஊதியமாக வழங்கப்படும் என்றும், 1 காலியிடம் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்வுகள் எதுவும் இல்லாமல், நேர்காணல் மூலமே பணியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணலுக்கு https://b-u.ac.in/ என்ற தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பெற்று கீழே உள்ள முகவரிக்கு 10.01.2023 காலை 10 மணிக்கு நேரில் செல்ல வேண்டும்.

முகவரி:

Entrepreneurship Development Programme HUB,

Bharathiar University,

Coimbatore – 641 046, Tamil Nadu.


No comments:

Post a Comment