இன்றைய காலகட்டத்தில் வயதானவர்கள் என்பது மட்டுமின்றி இளம் வயதினருக்கும் கூட மாரடைப்பு ஏற்படுகிறது. ஒரு மனிதனின் சிறந்த ஆரோக்கியத்திற்கு அவரின் இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆரோக்கியமான உணவு, நிறைய உடல் செயல்பாடு மற்றும் முழு இரவு தூக்கம் உட்பட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேப்படும். அதிக கொழுப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் புகைபிடித்தல் ஆகியவை இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் ஆகும். நீங்கள் இளம் வயது முதலே ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் இதய ஆரோக்கியம் சிறப்படையும். 30 வயதை எட்டியதும் நீங்கள் உங்கள் உணவிலும், வாழ்க்கையிலும் மாற்றவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே காண்போம்.
1. உடல் உழைப்பின்மை இதய நோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. தினமும் உங்கள் உடற்பயிற்சியுடன் ரன்னிங், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் நீச்சல் போன்ற கார்டியோ செயல்பாடுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். கார்டியோ உடற்பயிற்சிகள் உங்கள் இதயத் துடிப்பை உயர்த்துவதோடு, இரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்துகிறது.
2) நீங்கள் சாப்பிடும் உணவில் ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம், உங்கள் உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதசத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை இப்போதே சாப்பிட தொடங்கினால் நீங்கள் வயதாகும்போது உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படும். ஒரு நாளைக்கு 4.5 கப் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும், ஒரு வாரத்திற்கு குறைந்தது 3.5 கப் மீன் சாப்பிட வேண்டும், ஒரு நாளைக்கு 1 அவுன்ஸ் அளவு வேகவைத்த நார்சத்து நிறைந்த முழு தானியங்களை சாப்பிட வேண்டும் மற்றும் நட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் விதைகள் போன்றவற்றை ஒரு வாரத்திற்கு குறைந்தது 4 தடவை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க விரும்புபவர்கள் உங்கள் உணவில் உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும் மற்றும் நிறைவுற்ற கொழுப்புக்களை சாப்பிடக்கூடாது. மேலும் நீங்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சர்க்கரை பானங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.
3) பெரும்பாலும் இளம் வயதினருக்கு சிகரெட் பிடிப்பதனால் தான் மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. புகைபிடிப்பதனால் அதிலுள்ள நச்சு புகைகள் இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தை அதிகரிப்பதோடு, தமனிகளில் கொழுப்பை படிய வைக்கிறது. இதய பிரச்சினைகள் உள்ள நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் புகைப்பிடிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4) நீண்ட கால மன அழுத்தம் இருப்பதும் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் உங்கள் தமனியின் சுவர்கள் சேதப்படுத்தும். வேலை ரீதியாக மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சில காரணமாக மன அழுத்தம் இருப்பது உங்கள் இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்பை ஏற்படுத்திவிடும். உங்கள் மன அழுத்தம் குறைய சுவாசப் பயிற்சிகள், தினசரி தியானம் அல்லது நீங்கள் விரும்பும் ஏதேனும் ஒன்றைச் செய்யலாம். மன அழுத்தமின்றி இருந்தால் உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
No comments:
Post a Comment