பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5,000 பரிசு – மத்திய அரசின் அறிவிப்பு!
ஜனவரி 23ஆம் தேதி அன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி மத்திய அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளை அறிவித்துள்ளது. இதற்கான பரிசுகள் குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளது.
கலை இலக்கிய போட்டிகள்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டின் முக்கிய தலைவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினங்களை சிறப்பிக்கும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பலவகையான போட்டிகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜனவரி 23ஆம் தேதி அன்று வரவுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்க ‘பராக்கிரம் திவாஸ்’ என்ற கலை இலக்கிய போட்டிகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் அனைவரும் இதில் பங்கேற்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.
அதன்படி மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை மற்றும் செல்பி போட்டிகள் நடக்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மை கவர்மெண்ட் இணையதளம் மூலமாக நடைபெற இருக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் 25 மாணவர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 5000 பரிசுத் தொகையை அளிக்க உள்ளதோடு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது.
மேலும் மாணவர்கள் தங்கள் ஊரிலிருந்து டெல்லிக்கு வந்து செல்வதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்றுக்கொள்ளும். மாணவர்கள் அனைவரும் தங்களின் கவிதை, கட்டுரை மற்றும் செல்பி புகைப்படங்களை ஜனவரி 20ஆம் தேதிக்குள் அரசு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தில் இணையதளங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சுவரொட்டி வடிவமைப்பு போட்டி:
https://www.mygov.in/task/draw-portrait-netaji-subhas-chandra-bose/
கவிதை போட்டி:
https://www.mygov.in/task/compose-poem-netaji-subhas-chandra-bose/
0 Comments:
Post a Comment