Recruitment of Apprentice Development Officer 22-23: ஆயுன் காப்பீட்டுத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, அதன் அலுவலகங்களில் அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரி (Apprentice Development Officer) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வணிக சந்தைப் பற்றிய புரிதலும், நல்ல தகவல் தொடர்புத் திறனும் கொண்ட திறமையுள்ள இளம் பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
காலியிடங்கள்: எல்.ஐ.சி தென்மண்டலத்தில் மட்டும் தோராயமாக 1516 அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரிகளின் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு மற்றும் நியமனங்களில், அரசின் இட ஒதுக்கீட்டு முறை உட்பட்ட அரசின் விதிகளின்படி இருக்கும்.
அடிப்படைத் தகுதிகள்: விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி அல்லது மும்பையில் உள்ள இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஃபெலோஷிப் (Felowship) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுகள் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 12.03.3023, முதன்மைத் தேர்வுகள் 08.04.2023 ஆகிய தேதியில் நடைபெறும்.
ஊதியங்கள் மற்றும் பயன்கள்: பயிற்சிக் காலத்தில், அப்ரண்டிஸ் வளர்ச்சி அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரருக்கு ஒரு நிலையான உதவித் தொகையாக (Stipend) மாதத்திற்கு சுமார் ரூ.51,500/- வழங்கப்படும்.
அதன் பின், வளர்ச்சி அதிகாரியாக பதவி பெற்றவுடன் (Probationary Development: Officer), நிலையான சம்பளம் மற்றும் படிகளுடன், கிராஜூவிடி (Gratuity), வரையறுக்கப்பட்ட பங்களிப்பு கொண்ட ஓய்வூதியம், (Defined Contiributory Pension Scheme), விடுப்பு பயண சலுகை (LTC), மருத்துவச் சலுகை, குழுக்காப்பீடு (Group Insurance)மற்றும் குழுவின் தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகனம் வாங்குவதற்கான முன் பணம் (2 வீலர் மற்றும் 4 வீலர்)ஆகிய பயன்கள் உண்டு. மேலும் கைப்பெட்டி/லெதர் பேக், கைப்பேசி (Mobile Handset) போன்றவை வாங்கிய பின் அத்தொகையினை திரும்பப் பெறும் வசதிகளும் உண்டு.
வளர்ச்சி அதிகாரியாக (Development Officer) 'பணி நிரந்தரம் பெற்ற பின், செயல்திறனுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைக்கும் (Performance Linked Incentives) தகுதி பெறலாம்.
விண்ணப்பம் செய்வது எப்படி? எல்ஐசி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://licindia.in/-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.02.2023 ஆகும்.
No comments:
Post a Comment