மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி கிட்டத்தட்ட 50,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற வழிவகை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன.
இதன், விவரங்கள் பின்வருமாறு :
மாவட்டம் | பணி வாய்ப்புகள் | இடம் | நாள் |
தருமபுரி | 10,000 | நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | 21.01.2023 |
அரியலூர் | 20,000 | மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மகிமைபுரம், ஜெயங்கொண்டம், அரியலூர் | 28.01.2023 |
விருதுநகர் | 5,000 + | சைவ பானு சத்ரியா கல்லூரி, அருப்புக்கோட்டை , விருதுநகர் மாவட்டம் | 28.01.2023 |
கரூர் | 5000+ | அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி), கரூர்தாந்தோணிமலை, கரூர் - 639005. | 22.01.2023 |
ஈரோடு | 10,000+ | நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெருந்துறை ரோடு,ஈரோடு மாவட்டம் | 22..01.2023 |
இந்த வேலைவாய்ப்பு முகாம்களில் பல நூறுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாம்களில் எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில், 68,829 காலியிடங்களுக்கு 327 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன. 1,29,758 பேர் கலந்து கொண்ட நிலையில், 53, 257 பேர் முதல் சுற்றை முடித்துளள்னர். இவர்களில், இறுதியாக வேலைவாய்ப்பு கடிதம் பெற்றவர்கள் எண்ணிக்கை 37,782 ஆகும். அதாவது, வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டவர்களில் தோராயமாக 30% பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெறும் 18% ஆகும். எனவே, வேலைதேடுபவர்கள் மேற்படி முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், விவரங்களைப் பெற அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையங்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment