செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையில் உள்ள பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவ அலுவலர், ஒப்பந்த செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர், ஆதரவு ஊழியர், இடைநிலை சுகாதார பணியாளர், மருந்தாளுநர், தரவு உள்ளிட்டாளர், நகர்ப்புற சுகாதார செவிலியர் என்று மொத்தம் 55 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்குச் சம்பளம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரம் வரை வழங்கப்படும்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Medical Officer | 10 | ரூ.60,000 |
Staff Nurse | 10 | ரூ.18,000 |
MPHW (HI GrII) | 10 | ரூ.14,000 |
Support Staff | 10 | ரூ.8,500 |
RBSK Pharmacist | 1 | ரூ.15,000 |
Data Entry Operator | 1 | ரூ.13,500 |
Data Entry Operator (National programme for Blindness control) | 1 | ரூ.13,500 |
MLHP | 4 | ரூ.18,000 |
Urban Health Nurse/ANM | 8 | ரூ.14,000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Medical Officer | MBBS., |
Staff Nurse | GNM / B.Sc (Nursing) |
MPHW (HI GrII) | அறிவியல் பிரிவில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, 10 ஆம் வகுப்பில் கண்டிப்பாகத் தமிழ் மொழி தேர்ச்சி, Multipurpose Health Worker (Male) / HealthInspector / Sanitary Inspector Course ஆகிய பாடங்களில் 2 வருட சான்றிதழ் |
Support Staff | எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் |
RBSK Pharmacist | Pharmacy பாடத்தில் டிகிரி/டிப்ளமோ/ Pharm. D |
Data Entry Operator | கணிதத்தில் டிகிரி மற்றும் Computer applications பாடத்தில் 1 வருட முதுகலை டிப்ளமோ. தட்டச்சு |
Data Entry Operator (National programme for Blindness control) | கணினி பாடத்தில் டிகிரி அல்லது ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் Computer applications டிப்ளமோ |
MLHP | DGNM / B.Sc Nursing / B.Sc Nursing |
Urban Health Nurse/ANM | ANM சான்றிதழ் |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அலுவலகத்திற்குத் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://chengalpattu.nic.in/notice
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
செங்கல்பட்டு மாவட்டம் - 603 001.
தொலைப்பேசி எண் : 044-29540261.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment