மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஃபதேகர் கன்டோன்மென்ட் போர்டில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 21 வயது நிறைந்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் | வயது |
R.M.O(Doctor) | 1 | ரூ.15,600-69,100 | 23-35 |
Mid-Wife(Trained) | 1 | ரூ.5,200-20,200 | 21-30 |
Electrician | 1 | ரூ.5,200-20,200 | 21-30 |
Motor Pump Attendant | 1 | ரூ.5,200-20,200 | 21-30 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
R.M.O(Doctor) | எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு மற்றும் 1 வருடப் பயிற்சி |
Mid-Wife(Trained) | ANM 2 வருட டிப்ளமோ |
Electrician | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ |
Motor Pump Attendant | 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்/திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://fatehgarh.cantt.gov.in/என்ற இணையத்தளத்தில் 21.01.2023 முதல் விண்ணப்பிக்கத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 மற்றும் இதர பிரிவினர் ரூ.800 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://fcb.onlineregistrationforms.com
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 21.02.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment