Indian railway Apprentice Recruitment : இந்திய ரயில்வே தொழிற்பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 (Apprentice Act) முதல் குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
அந்த வகையில், வெல்டர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தென் கிழக்கு ரயில்வே வாரியம் (South Eastern Railway) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் , 2026 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 02-02-2023 ஆகும்.
அதே போன்று, ஏசி மெக்கானிக், கார்பன்டர், எலக்ட்ரிசியன், பிட்டர், பெயிண்டர், வெல்டர் பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை தெற்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் 4103 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தெற்கு மத்திய ரயில்வே மணடலத்தின் கீழ் வரும், வேலூர் மாவட்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 29.01.2023 ஆகும்.
ஜெய்ப்பூரை தலைமையாகக் கொண்டு இயங்கி வரும், வடமேற்கு ரயில்வே மண்டலம், மெக்கானிக்கல், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநருக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதன்மூலம், 2026 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி 10.02.2023 ஆகும்.
மேற்கூறிய பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. மேலும், தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் , விண்ணப்பத்தாரருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முதல் நிலை காலியிடங்களில் ( Level – 1 recruitment) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்து வருகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
0 Comments:
Post a Comment