திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரவுக்காவலர் பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2022 அன்றைய தேதியில் குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 வயதிற்கு மிகாமலும், BC, MBC/DNC பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், SC/ST மற்றும் SCA பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பம் பெற்று, உரிய விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 27.01.2023 மாலை 5.45 மணிக்குள். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக பரிசீலிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், பாரதிதாசன் சாலை, கண்டோன்மென்ட், மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் (பின்புறம்) திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.
No comments:
Post a Comment