Search

ஒரு மணி நேரத்துக்கு ரூ.800 மதிப்பூதியம்; போட்டித் தேர்வுகளுக்கு பாடம் எடுக்க பயிற்றுநர்களுக்கு அழைப்பு

 

திருவள்ளூர்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் பயிற்றுநர்களை ஈடுபடுத்துவதற்கான அறிவிப்பை  அம்மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ளார்.

தன்னார்வ பயிலும் வட்டங்களில் மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகிறது.  இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியமாக ஒருமணி நேரத்துக்கு சூ.800 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்புக்கும் பிபீடி, மதிப்பிட்டு வினாக்கள், மாதிரி தேர்வு வினாக்கள் தயார் செய்து தரவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மதிப்பூதியத்துக்கு தகுந்தபடி ஒவ்வொரு தேர்வுக்கும் குறிப்பிட்ட பாடப் பிரிவுகளைக் கையாளும் வகையில், தரமான பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்,விருப்பமுள்ள பயிற்றுநர்கள்,  https://bit.ly/facultyregistrationform இல் உள்ள படிவத்தை நிறைவு செய்து அளிக்க வேண்டும்.

போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தி முன் அனுபவம் பெற்றவர்கள் தமிழ்,ஆங்கில வழிகளில் வகுப்புகள் நடத்துவதற்கு தகுதி  பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக் குறிப்புகள், மாதிரி வினா, தொடர்புடைய பாடத்தின் பிபிடி ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொடர்புடைய  பாடத்தில் ஏதேனும் ஒரு தலைப்பில் மாதிரி வருப்புகள் நடத்தப்பட  வேண்டும்.

விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட்அளவு புகைப்படம், தன்குறிப்பு (Bio-Data), அனைத்துக் கல்வி சான்றிதழ்களுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகி பயன் பெறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

 Click here to join WhatsApp group for Daily employment news

0 Comments:

Post a Comment