நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர் பணிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுளளது. இது, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், குறைவு காலிப்பணியிடமாக (Shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பட உள்ளது.
பதவியின் பெயர் | ஜீப்பு ஓட்டுநர் |
மொத்தப் பணியிடங்கள் | 1 |
இடஒதுக்கீடு விவரங்கள் | பழங்குடியினர் மட்டும் |
வயது | 18 - 42 வயதிற்குள் இருக்க வேண்டும் |
கல்வித் தகுதி | 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் |
சிறப்புத் தகுதி | தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும் . |
சம்பளம் | ரூ. 19500 - 62,000 வரை |
விண்ணப்பப் படிவம் | மாதிரி விண்ணப்பப் படிவத்தினை https://namakkal.nic.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 30.01.2023 பிற்பகல் 5.45 மணி வரை |
நிபந்தனைகள்:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://namakkal.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி செய்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வாகளம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபபம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 21.01.2023 முதல் 31.01.2023 அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண். 06, முன்றாவதுதளம், மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சிப் பிரிவு) மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், நாமக்கல் 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click here for latest employment news
No comments:
Post a Comment