இந்த 7 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..! - Agri Info

Adding Green to your Life

January 19, 2023

இந்த 7 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..!

 பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கும் பேரிச்சை இனிப்பில் பால் குடிப்பது இன்னும் கூடுதல் பலன் தானே...சரி அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.

தூக்கமின்மை : தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம் பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க சரியாகலாம்.

மலச்சிக்கல் : 5-8 பேரிச்சம் பழத்தை அரை லிட்டர் பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் குடியுங்கள். இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை உணவு சாப்பிடும்போதும் சில பேரிச்சைகளை சாப்பிடலாம்.

வாயு : வாயுத்தொல்லை இருந்தால் பேரிச்சம் பழத்துடன் இடித்த சீரகத்தை 2:1 என்ற அளவில் பாலின் கலந்து குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.

ஹாங் ஓவர் : பாலில் நன்கு ஊறிய பேரிச்சம் பழத்தை சாப்பிட ஹாங்ஓவர் சரியாகும்.

இரத்த சோகை, நரம்பு நோய்கள்,: இந்த 2 பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.

இருமல் : பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெதுவெதுப்பான பாலை குடிக்கும்போது நீடித்த இருமலை போக்க முடியும். இதற்கு பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.

பாலூட்டும் அம்மாக்களுக்கு நல்லது : பாலில் ஊற வைத்த பேரிச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. பாலும் நன்கு சுரக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

No comments:

Post a Comment