வேளாண்மை அலுவலர், வேளாண்மை திட்ட இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service commission) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட காலியிடங்கள்:
வேளாண்மை அலுவலர்: 33 + 4 முன்கொணர்வு பணியிடங்கள்;
வேளாண்மை உதவி இயக்குநர்: 8;
தோட்டக்கலை அலுவலர்: 41 + 7 முன்கொணர்வு பணியிடங்கள்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை நாள்: 12.01.2023
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 10.02.2023
தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:- 20.5. 2023 மற்றும் 21.05.2023
வயது தகுதி : மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது. வேளாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு அல்லது முனைவோர் பட்டம் பெற்றவர்கள் 34 வயதிற்கு மேல் இருத்தல் கூடாது.
கல்வித்தகுதி:
வேளாண்மை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வேளாண்மை துறையில் இளங்கலை பட்டம் (B.Sc., Agriculture) பெற்றிருக்க வேண்டும்.
வேளாண்மை உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வேளாண்மை விரிவாக்க படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (A degree of M.Sc., in Agricultural Extension or
Agricultural Economics)
தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தோட்டக்கலை துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி விண்ணப்பத்தை 10.02.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.
0 Comments:
Post a Comment