விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட இருக்கின்றன. இங்கே பணிபுரிய ஆர்வமுமம், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. செவிலியர் பணிக்கான காலிப்பணியிடங்கள் : 13.
2. கல்வி தகுதி : செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. வயது வரம்பு : விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 22-02-2023 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
4. மாத சம்பளம் : செவிலியர் (Staff Nurse) – ரூ.18,000/-
5. பணி நிபந்தனைகள் : இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
6. விண்ணப்பிக்கும் முறை : ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள், https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/01/2023011269.pdf என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 25-01-2023 அன்று அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும்.
7. விண்ணப்ப அனுப்ப வேண்டிய முகவரி : செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், விருதுநகர் மாவட்டம். விருப்பம் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
No comments:
Post a Comment